Anjali wedding plans : நடிகை அஞ்சலி கல்யாணம் பத்தி அடிக்கடி கேட்கப்படும் கேள்விக்கு இப்போ செம மாஸான ஒரு பதில் சொல்லியிருக்காங்க. அவங்க சொன்ன அந்த சுவாரஸ்யமான பதில் என்னன்னு இங்கே பார்க்கலாம்.
நடிகை அஞ்சலி தென்னிந்திய சினிமாவுல தன்னோட எதார்த்தமான நடிப்பால ரசிகர்களை கவர்ந்திருக்காங்க. இப்போ அவங்க கல்யாணம் பத்தின பேச்சுதான் சோஷியல் மீடியாவுல வைரல். கல்யாணத்துக்கு தனக்கு எந்த அவசரமும் இல்லைன்னு ரொம்ப கூலா சொல்லியிருக்காங்க அஞ்சலி. சமீபத்துல யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டி கொடுத்தாங்க. அப்போ அவங்ககிட்ட, 'எப்போ கல்யாணம்?'னு திரும்பத் திரும்ப கேட்கப்படுற கேள்வி பத்தி கேட்டாங்க. "அது என் கல்யாணம், நான் பண்ணிப்பேன். மத்தவங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறைன்னு புரியல"னு தன்னோட ஸ்டைல்ல நச்சென்று பதில் சொல்லியிருக்காங்க.
அஞ்சலியோட இந்த ஜாலியான பேட்டி இப்போ ரசிகர்களோட கவனத்தை ஈர்த்திருக்கு. கல்யாணத்துக்குன்னு எந்த ஒரு தேதியையோ நேரத்தையோ அவங்க இன்னும் முடிவு பண்ணல. அது தன்னோட தனிப்பட்ட முடிவுன்னும், தனக்கு தோணுறப்போ கல்யாணம் பண்ணிப்பேன்னும் ரொம்ப தெளிவா சொல்லியிருக்காங்க. அஞ்சலி இப்போ சினிமாவுல ரொம்ப பிஸியா இருக்காங்க. சமீபத்துல விஷால் நடிச்ச 'மகுடம்' படத்துல நடிச்சிருந்தாங்க. அடுத்து ராம் இயக்கத்துல சூரி, நிவின் பாலி கூட நடிச்சிருக்க 'ஏழு கடல் ஏழு மலை' படம் அக்டோபர் 1-ஆம் தேதி ரிலீஸாக இருக்கு.
பட வேலைகள்ல பிஸியா இருக்குறதால கல்யாணத்துக்கு இப்போதைக்கு அவசரப்படல அஞ்சலி. 'கல்யாணம் எப்போ?'னு கேட்குறவங்களுக்கு தன்னோட ஸ்டைல்ல பதில் சொல்லி, இது தன்னோட தனிப்பட்ட முடிவுங்கிறதை மறுபடியும் தெளிவுபடுத்தியிருக்காங்க.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.