The Paradise: ட்ரோலுக்கு மத்தியில் 'தி பாரடைஸ்' வசூல் வேட்டை.. மாஸ் காட்டும் நானி.. கலெக்ஷன் எவ்வளவு?

Published : Sep 27, 2026, 08:35 AM IST

The Paradise: நானி நடிப்பில் வெளியான 'தி பாரடைஸ்' திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தாலும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து பார்ப்போம்.

PREV
14
நானியின் நடிப்பில் 'தி பாரடைஸ்'

நானி, கயாடு லோஹர் நடிப்பில் வெளியான 'தி பாரடைஸ்' திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. 'தசரா' படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இப்படத்தை இயக்கியுள்ளார். மோகன் பாபு, சம்பூர்ணேஷ் பாபு மற்றும் பிரியதர்ஷி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கடந்த 200 ஆண்டுகளாக அடையாளமே இல்லாமல் இருக்கும் 'சவாரி' இனம், தங்களது உரிமைக்காக நடத்தும் போராட்டமே இப்படத்தின் கதையாகும். அந்த மக்களுக்காக 'ஜடல்' என்ற கதாபாத்திரத்தில் நானி செய்யும் புரட்சியே இந்த மாஸ் கமர்ஷியல் படத்தின் மையக்கதை ஆகும்.

24
விமர்சனங்கள் இருந்தாலும் வசூல் மழை

பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான 'தி பாரடைஸ்' படம் தொடக்கத்தில் எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்தது. சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட கிண்டல்கள் மற்றும் ட்ரோல்கள் வந்தன. ஆனாலும் பாக்ஸ் ஆபிஸில் இப்படம் வேற லெவல் ஹிட் அடித்துள்ளது. நானியின் கேரியரிலேயே முதல் நாளில் இவ்வளவு பெரிய ஓப்பனிங் கிடைத்தது இதுவே முதல்முறையாகும். மேலும், இரண்டு மற்றும் மூன்றாவது நாட்களிலும் வசூல் குறையவே இல்லை. ஞாயிற்றுக்கிழமை அன்று வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

34
100 கோடி கிளப்பில் இணைந்த நானி

இப்படம் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல் விவரம் பின்வருமாறு: சனிக்கிழமை மட்டும் இந்தியாவில் ரூ.15.25 கோடியும், வெளிநாடுகளில் ரூ.4 கோடியும் இப்படம் வசூலித்துள்ளது. மூன்றாவது நாளில் உலக அளவில் ரூ.24 கோடி கிராஸ் வசூலை எட்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக மூன்று நாட்களில் உலக அளவில் ரூ.119.50 கோடி கிராஸ் கலெக்‌ஷனை இப்படம் அள்ளியுள்ளது. இதில் இந்தியாவில் ரூ.90.50 கோடியும், வெளிநாடுகளில் ரூ.29 கோடியும் அடங்கும். இதுவரை ரூ.60 கோடி ஷேர் கிடைத்துள்ளது. இன்னும் ரூ.40 கோடி ஷேர் (அதாவது ரூ.80 கோடி கிராஸ்) வந்தால் படத்தை சூப்பர் ஹிட் என்று அதிகாரப்பூர்வமாகச் சொல்லிவிடலாம்.

44
60 சதவீத வசூலை எட்டிவிட்டது

'தி பாரடைஸ்' படத்தின் தயாரிப்புச் செலவு மற்றும் விளம்பரங்கள் என அனைத்தும் சேர்த்து ரூ.150 கோடி என்று கூறப்படுகிறது. தியேட்டர் உரிமை தவிர்த்து மற்ற உரிமங்கள் மூலமாகவே படக்குழுவினர் ரூ.80 முதல் ரூ.100 கோடி வரை லாபம் பார்த்துள்ளனர். நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ரூ.50 கோடி கொடுத்து இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை வாங்கியுள்ளது.

ஆடியோ உரிமை மூலமாக ரூ.15 கோடி கிடைத்துள்ளது. மேலும், சாட்டிலைட் உரிமமும் நல்ல விலைக்குப் போயுள்ளது. தியேட்டர் உரிமம் ரூ.100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. ரூ.200 கோடி கிராஸ் கலெக்‌ஷன் என்ற இலக்கோடு வெளியான இப்படம், தற்போதே 60 சதவீத வசூலை எட்டிவிட்டது. லாங் ரனில் இப்படம் தனது இலக்கை எளிதாக அடைந்துவிடும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories