ஊருக்கு ரெண்டு ஊதாரி... பிக்பாஸ் பிரஜின் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை தொடங்கி வைத்த விஜய் சேதுபதி

Published : Feb 05, 2026, 03:43 PM IST

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட பிரஜின் ஹீரோவாக நடிக்கும் ஊருக்கு ரெண்டு ஊதாரி திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி இருக்கிறது.

PREV
14
Oorukku Rendu Oothari Movie Pooja

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலங்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் வந்து குவியும். அதை சரியாக பயன்படுத்துபவர்களே வெற்றியடைகிறார்கள். அதன்படி ஹரிஷ் கல்யாண், கவின், ரியோ ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பெயரையும் புகழையும் அருமையாக பயன்படுத்திக் கொண்டதால் இன்று கவனிக்கத்தக்க ஹீரோக்களாக உருவெடுத்திருக்கிறார்கள். மற்றவர்கள் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாததால் சிறிது நாட்களிலேயே ஆள் அட்ரஸே தெரியாமல் போய்விடுகிறார்கள். உதாரணத்திற்கு ஓவியாவை சொல்லலாம். அவருக்கு இருந்த பாப்புலாரிட்டிக்கு நம்பர் 1 ஹீரோயின் ஆகியிருக்கலாம். ஆனால் அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை.

24
ஹீரோவாக நடிக்கும் பிரஜின்

அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட பிரஜின், தற்போது புதுப்படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகி உள்ளார். அப்படத்தை யோகேஸ்வரன் மைனர் இயக்குகிறார். அப்படத்தில் பிரஜின் உடன் விஜய் டிவி நட்சத்திரம் புகழும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அப்படத்தில் பிக் பாஸ் ஜனனி நாயகியாக நடிக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி இருக்கிறது. இந்த பூஜை சென்னையில் நடைபெற்றது.

34
ஊருக்கு ரெண்டு ஊதாரி படத்தின் பூஜை

பிரஜின் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு ஊருக்கு ரெண்டு ஊதாரி என டைட்டில் வைக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் பூஜையில் சிறப்பு விருந்தினராக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கலந்துகொண்டார். பிரஜினும் விஜய் சேதுபதியும் நெருங்கிய நண்பர்களாவர். சினிமாவுக்கு வரும் முன் விஜய் சேதுபதி சீரியலில் பிரஜின் உடன் இணைந்து நடித்திருக்கிறார். அப்போதிலிருந்தே இருவரும் நட்புடன் பழகி வந்துள்ளனர். இந்த பிக் பாஸ் சீசனில் அந்த நட்பு மேலும் வலுவடைந்திருக்கிறது.

44
ஊருக்கு ரெண்டு ஊதாரி படக்குழு

ஊருக்கு ரெண்டு ஊதாரி திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா தான் இசையமைக்கிறார். ஏ.ஆர்.கே. புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ராஜா பட்டாசார்ஜி பணியாற்றுகிறார். படத்தொகுப்பு பணிகளை செந்தமிழ்ச் செல்வன் மேற்கொள்கிறார். மிரட்டல் செல்வா ஸ்டண்ட் மாஸ்டராகவும், மணிகண்டன் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். பாடல்களை சினேகன் எழுதுகிறார். ராமகிருஷ்ணன் மற்றும் வினோத் பெருமாள் இப்படத்தை தயாரிக்கிறார்கள். இது பிரஜினுக்கு கம்பேக் படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories