மார்பகப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த வாஹினி, அதற்காக சிகிச்சை எடுக்க பணமில்லாத காரணத்தால் மரணமடைந்துள்ளார். அவரின் மறைவு சின்னத்திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல திரைப்பட, சின்னத்திரை நடிகை வாஹினி (48) புற்றுநோய் பாதிப்பால் காலமானார். சின்னத்திரையில் தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்த இவர், சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். கடந்த சில காலமாக மார்பகப் புற்றுநோயால் வாஹினி அவதிப்பட்டு வந்தார். நோய் முற்றியதால், சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்பட்டது. போதிய பணமில்லாததாலும், உடல்நிலை மோசமடைந்ததாலும் புதன்கிழமை அவர் காலமானார்.
24
சீரியல் நடிகை வாஹினி காலமானார்
கராத்தே கல்யாணி, வாஹினியின் மரணம் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். 'உன்னைக் காப்பாற்ற மிகவும் முயன்றேன். நிலைமை மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்த பின்னர் சொந்த ஊருக்கு கொண்டு சென்றோம். தன் சொந்த ஊரான விஜயநகரத்தில் இறைவனடி சேர்ந்தார்' எனப் பதிவிட்டுள்ளார். வாஹினியின் மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரின் மறைவுக்கு ஏராளமானோர் சோசியல் மீடியா வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
34
சிகிச்சைக்கு பணமில்லை
1978ல் விஜயநகரத்தில் பிறந்த வாஹினி, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமடைந்ததால், பல உறுப்புகள் செயலிழந்தன. ஐசியூ மற்றும் கீமோதெரபி சிகிச்சையால் மருத்துவ செலவுகள் அதிகரித்தன. சிகிச்சைக்கு ரூ.35 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். கராத்தே கல்யாணி உதவி கோரியும், போதிய பணம் சேரவில்லை. உடல்நிலை மோசமடைந்ததால், புதன்கிழமை விஜயநகரத்தில் அவர் காலமானார்.
சிகிச்சைக்கு பணமில்லாமல் சின்னத்திரை நடிகை வாஹினி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சின்னத்திரையில் வில்லியாக பல தொடர்களில் நடித்து பேமஸ் ஆனார் வாஹினி. இவர் தெலுங்கு மட்டுமின்றி தமிழில் சில தொடர்களில் நடித்திருக்கிறார். கேன்சர் பாதிப்புக்கு பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்ட வாஹினி, கடந்த சில மாதங்களாக அதற்காக சிகிச்சையும் எடுத்து வந்தார். அவரின் மறைவு சின்னத்திரை வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.