'விஜய்யே எனக்கு போன் செய்தார்.. போதுமா'.. உடைத்து பேசிய விஜய் சேதுபதி.. சர்ச்சைக்கு ஃபுல் ஸ்டாப்!

Published : Sep 19, 2026, 02:30 PM IST

Vijay Sethupathi vs Vijay: முதல்வர் விஜய்யே தன்னிடம் போன் செய்து பேசினார் என்று தன் மீதான சர்ச்சைகளுக்கு மத்தியில் உடைத்து பேசியிருக்கிறார் விஜய் சேதுபதி. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
14
விஜய்யை விமர்சித்தாரா விஜய் சேதுபதி?

ரசிகர்களின் ஆதரவை பெற்ற 'பிக்பாஸ் சீசன் 10' நிகழ்ச்சியை பிரபல நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் போட்டியாளர்களிடம் அவர் பேசிய பேச்சு முதல்வரும், நடிகருமான தளபதி விஜய்யின் ரசிகர்களுக்கும். தவெக தொண்டர்களுக்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடம் தலைமைப் பண்பு குறித்து பொதுவாக பேசிய விஜய் சேதுபதி, ''யோசிக்காமல் வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, பின்னர் பொறுப்புக்கு வரும்போது பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும். இதற்கு மாறாக எதிர்தரப்பினர் மீது பழிபோட்டுவிட்டு ஓடிவிடுவது தலைமை கிடையாது; அது ஏமாற்று வேலை" என்ற தொனியில் விஜய் சேதுபதி கருத்து தெரிவித்து இருந்தார்.

24
விஜய் சேதுபதிக்கு பெருகிய ஆதரவு

விஜய் சேதுபதி முதல்வர் விஜய்யை தான் விமர்சித்ததாக தவெக தொண்டர்கள், ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்தனர். விஜய் சேதுபதி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என சில தவெக அமைச்சர்களும் தெரிவித்து இருந்தனர். அதே வேளையில் திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகளின் தொண்டர்கள் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக இருந்தனர்.

''விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் அந்த போட்டியாளர்களிடம் பேசி இருக்கிறார். அது நிகழ்ச்சியின் பொதுவான கருத்து. இதை எப்படி அவர் விஜய்யை தான் விமர்சித்தார் என எடுத்துக் கொள்ள முடியும்? அப்படியே அவர் விஜய் குறித்து பேசி இருந்தாலும் என்ன தவறு? ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் கருத்து கூற உரிமை உண்டு'' என அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு குவிந்தன. நாம் தமிழர் கட்சியின் சீமான், அதிமுக இன்பதுரை ஆகியோர் நேரடியாகவே விஜய் சேதுபதிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

விஜய் டிவி நிர்வாகம் விளக்கம்

இதற்கிடையே விஜய் சேதுபதியின் பேச்சுக்கு விளக்கம் அளித்த விஜய் டிவி நிர்வாகம், 'பிக் பாஸ் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமே. இதில் பேசப்படும் கருத்துகள் அனைத்தும் அந்த நிகழ்ச்சிக்கு மட்டுமே தொடர்புடையவை. அதனை பொதுவெளியில் இருக்கும் ஒரு தனிநபரையோ அல்லது அமைப்பினரையோ பேசியதாக எடுத்துக் கொள்ள கூடாது' என்று கூறியிருந்தது.

34
சர்ச்சையை உடைத்த விஜய் சேதுபதி

இந்த நிலையில், தன் மீதான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக முதல்வர் விஜய் குறித்தும், அவரது மகனும், இயக்குநருமான ஜேசன் சஞ்சய் குறித்து விஜய் சேதுபதி பேசிய பேச்சு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது விஜய் சேதுபதி நடித்த 'பத்தா' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

44
விஜய், அவரது மகன் குறித்து பேச்சு

இந்த விழாவில் பேசிய விஜய் சேதுபதி, ''நான் ஜேசன் சஞ்சய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தேன். அப்போது விஜய் எனக்கு போன் செய்து, 'நண்பா.. ஜேசனுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்' என்றார். விஜய் கூறியதை கேட்டதும் நான் அதிர்ச்சியாகிவிட்டேன். உண்மையிலேயே அதை எதிர்பார்க்கவில்லை.

ஏனெனில் அவர்(விஜய்) எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார். ஆனால் சஞ்சய்க்கு என்னை பிடித்திருக்கிறது என்பது எனக்கு ஆச்சரியம். ''என்னடா உங்க வீட்ல இவ்வளவு பெரிய ஆள் இருக்கும்போது, நீ என்னை பிடிச்சிருக்குனு சொல்றீயே' என சஞ்சயிடமே நான் நேரடியாக கேட்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.

தவெகவினர் கொந்தளிப்பு தணிந்தது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் பேசியது சர்ச்சையானது குறித்து விஜய் சேதுபதி ஏதும் விளக்கம் அளிக்கவில்லை. அதே வேளையில் அவர் விஜய்யையும், அவரது மகனையும் புகழ்ந்து பேசியிருப்பது தவெகவினரின் கொந்தளிப்பை சற்றே அடங்கச் செய்திருக்கிறது என்றே சொல்லலாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories