Vijay Photo With Mom
காதல் மன்னன் என தல அஜித்தை அழைத்தாலும், பெண் ரசிகைகளின் எண்ணிக்கை என்னமோ தளபதி விஜய்க்கு தான் அதிகம். அதற்கு காரணம் விஜய் அதிகம் பெண்கள் சென்டிமெண்ட் கொண்ட படங்களில் நடிப்பது தான். அண்ணன் - தங்கச்சி சீனில் நடிக்கும் போது நமக்கு இப்படி ஒரு அண்ணன் இல்லையே என ஏங்கவைத்துவிடுவார்.
Vijay Photo With Mom
பெண்கள் கால்பந்தாட்ட குழுவை மையாக வைத்து எடுக்கப்பட்ட பிகில் திரைப்படம் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு விஜய் அட்வைஸ் செய்து துணிச்சலாக வெளியே வரவைக்கும் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
Vijay Photo With Mom
பேட்டி ஒன்றில் விஜய்யின் தாய் ஷோபா, தளபதிக்கு பிடித்தது,பிடிக்காதது, தங்கை உடனான பாசம் போன்ற தகவல்கள் குறித்து பேசியுள்ளார். ஏராளமான சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ள ஷோபா, தனது முதல் சம்பளத்தில் விஜய் ஆசையாக தனக்கு வாங்கி கொடுத்த கிப்ட் குறித்து மனம் திறந்துள்ளார்.
Vijay Photo With Mom
தளபதி விஜய் தனது சம்பளத்தில் அம்மா ஷோபாவிற்கு புடவை ஒன்றை கிப்டாக வாங்கி கொடுத்துள்ளார். அதை வாங்க கடைக்குச் செல்வதற்கு முன்பு, அம்மாவிற்கு போன் செய்த விஜய், உங்கள் புடவை என்ன சைஸ் என கேட்டுள்ளார். புடவைக்கு அளவு எல்லாம் கிடையாது என்பதை விஜய்க்கு சொல்லி புரியவைத்த அவரது அம்மா, அந்த நகைச்சுவையான தருணத்தில் பேட்டியில் நினைவு கூர்ந்துள்ளார்.
Vijay Photo With Mom
பின்னணி படகியான விஜயின் தாயார் ஷோபா.. இரண்டு படங்களை இயக்கியத்துடன் பல படங்களுக்கு கதையும் எழுதியுள்ளார்.. அதோடு விஜயின் சுறா படத்தில் "நான் நடந்தால் அதிரடி" பாடலிலும் இவர் குரல் ஒலித்திருக்கும்..
Vijay Photo With Mom
ஒளி இசைக் குழுக்களில் பாடகியாக இருந்த.ஷோபா .. பின்னர் படங்களில் பாடுவதில் பட்டம் பெற்றார். திரைப்பட தயாரிப்பாளர் கணவர் எஸ்.ஏ.சந்திரசேகரால் திரைப்படமாக எடுக்கப்பட்ட பல கதைகளை அவர் எழுதியுள்ளார் . அவர் திரைப்பட தயாரிப்பாளராக மாறி பின்னர் திரைப்பட இயக்குனரானார்.
Vijay Photo With Mom
விஜயின் தாயார் ஷோபா இரு மலர்கள் படத்திலிருந்து "மகாராஜா ஒரு மகாராணி..." என்ற பாடல்தான் அவரது முதல் திரைப்படப் பாடல் . அவர் தனது கணவர் சந்திரசேகர் தயாரித்த கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் பாடியுள்ளார்.
Vijay Photo With Mom
இந்நிலையில் பெண் குழந்தைகளை தினம் கொண்டாடப்பட்டு வரும் இன்றைய தினத்தில் தளபதி விஜய் அவரது தயார் சோபனாவுடன் எடுத்துக்கொண்ட புதிய புகைப்படம் செம வைரலாகி வருகிறது...