நடிகர் விஜய், விரைவில் அரசியலில் நுழையப் போகிறார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் அவரது செயல்களும் அமைந்துள்ளன. நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
ஆனால் இதுபற்றி விஜய் தரப்பில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனிடையே அண்மையில் வெளியான 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியரை நேரில் அழைத்து விஜய் வாழ்த்தி பரிசளிக்க உள்ளதாக கூறப்பட நிலையில், தற்போது அதுகுறித்த அறிக்கை ஒன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வெளியாகி உள்ளது.
ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டுமல்லாமல் அவருக்கு ஏழு பிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது! என்கிற ஊக்கமளிக்கும் வரிகளுடன் கூடிய அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : “தளபதி விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க, வருகின்ற ஜூன் 17-ந் தேதி சனிக்கிழமை அன்று "அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்" சார்பாக சென்னை, நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் செண்டரில் 2023-ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு "தளபதி விஜய்" அவர்கள் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்த உள்ளார்” என குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்... சமந்தாவே தோத்துடுவாங்க போல... புஷ்பா பட பாடலுக்கு சுட்டிக் குழந்தை ஆடிய கியூட் டான்ஸ் - வைரலாகும் வீடியோ