என் குழந்தை... வைரமுத்து போல் இல்லைனு சொல்வானுங்க - மகன்கள் குறித்த கேள்விக்கு சின்மயி அளித்த பளீச் ரிப்ளை

First Published | Jun 7, 2023, 8:43 AM IST

குழந்தையின் புகைப்படத்தை பதிவிடுமாறு கேட்ட ரசிகருக்கு மறுப்பு தெரிவித்து, அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார் பாடகி சின்மயி.

தமிழ் திரையுலகில் பல்வேறு முன்னணி இசையமைப்பாளர் இசையில் பாடி பிரபலமானவர் சின்மயி. பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடி உள்ள சின்மயி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். சின்மயி அளித்த இந்த புகார் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கடும் விமர்சனங்களையும் சந்தித்து வந்தார் சின்மயி.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரமுத்துவுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் சின்மயி, சமீபத்தில் கூட முதல்வருக்கே டுவிட்டர் வாயிலாக, வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். இப்படி வைரமுத்து விவகாரத்தில் தீவிரமாக இருக்கும் சின்மயி, அண்மையில் சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு சின்மயி பதிலளித்து வந்தார்.

இதையும் படியுங்கள்... ரஜினி படத்தை பார்த்த பின்புதான் நடிகையாக ஆசைப் பட்டேன்..! 'ரெஜினா பட விழாவில் சுனைனா பகிர்ந்த ரகசியம்!

Tap to resize

அப்போது நெட்டிசன் ஒருவர், உங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை பதிவிடுமாறு கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த சின்மயி, தற்போது முடியாது, எனக்கே நிறைய வெறுப்பு வருகிறது. என் குழந்தைகளுக்கும் அது வரவேண்டாம் என விரும்புகிறேன். இப்போதே வைரமுத்துவின் ரசிகர்கள் வைரமும் முத்துவும் பிறந்திருக்கிறார்கள் என கமெண்ட் செய்கிறார்கள். இந்த சமயத்தில் என் குழந்தையை காட்டினால் வைரமுத்து போல இல்லைனு சொல்லுவானுங்க தமிழ் கலாச்சார நண்பர்கள் என பதிவிட்டுள்ளார்.

பாடகி சின்மயி, கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர் நடிகர் ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 7 ஆண்டுகளாக குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்து வந்த இந்த ஜோடிக்கு கடந்தாண்டு தான் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. கர்ப்பமாக இருக்கும் தகவலை சின்மயி வெளியிடாததால், அவர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டாரா என்கிற கேள்வியும் எழுந்ததை அடுத்து, தான் கர்ப்பமாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு சர்ச்சைகளுக்கு எண்ட் கார்டு போட்டார் சின்மயி.

இதையும் படியுங்கள்... Swara Bhasker: கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்த தனுஷ் பட நடிகை! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!

Latest Videos

click me!