Swara Bhasker: கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்த தனுஷ் பட நடிகை! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!

First Published | Jun 6, 2023, 11:55 PM IST

பாலிவுட் நடிகை ஸ்வாரா பாஸ்கர், தனது கணவர் ஃபஹத் அகமதுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்துள்ளார்.  
 

பாலிவுட் திரையுலகில் மிகவும் துணிச்சலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதை தாண்டி, தன்னை பற்றிய வதந்திகளுக்கும், விமர்சனங்களுக்கும் மிகவும் போல்டாக பதிலடி கொடுப்பவர் ஸ்வரா பாஸ்கர். 

Swara Bhaskar

குறிப்பாக சில முறை மோடி அரசுக்கு எதிராக சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத வகையில் கருத்துக்களை வாரி இறைத்து,  பல முறை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டுள்ளார். 

52 வயசுலயும் 20 வயசு பொண்ணு போல இருக்கீங்களே.? குஷ்புவின் அழகை பார்த்து அசந்து போன ரசிகர்கள்! வைரல் போட்டோஸ்!

Tap to resize

இவர் நீண்ட காலமாக, சமாஜ்வாதி கட்சியின் இளைஞரணி தலைவரும், இளைஞர் தலைவருமான ஃபஹத் அகமதுவை காதலித்து வந்த நிலையில்... கடந்த பிப்ரவரி மதம் இவர்கள் ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

திருமணம் ஆகி ஒரு மாதம் ஆன பின்னர்... இவர்களுக்கு திருமண ரிசெப்ஷம் மிகவும் பிரமாண்டமாக நடந்த நிலையில் இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். 

சூர்யாவின் 'கங்குவா' படத்தின் சில காட்சிகளை பார்த்து விட்டு பிரபலம் கூறிய விமர்சனம்! எகிறும் எதிர்பார்ப்பு..!
 

இந்நிலையில் தற்போது ஸ்வரா பாஸ்கர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த மகிழ்ச்சியான தகவலை வெளிப்படுத்தியுள்ளார். பேபி பப்புடன் கணவர் அரவணைப்பில் உள்ளது போன்ற புகைப்படங்கள் சில வற்றை இவர் வெளியிட, அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதோடு, ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களையும், லைக்குகளையும் குவித்து வருகிறது. 

Latest Videos

click me!