சென்னையை சேர்ந்த, ராஜசேகர் பச்சை என்பவர் உலகிலேயே மிகப்பெரிய மலையாக கருதப்படும், எவரெஸ்ட் மலையில் ஏறி சாதனை படைத்த நிலையில், தற்போது அஜித்தை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி எவரெஸ்ட் அடிவாரத்தில் இருந்து தன்னுடைய சாதனை பயணத்தைத் தொடங்கிய ராஜசேகர் பச்சை 8,850 மீட்டர் உயரத்தை கடந்த மே மாதம் 19ஆம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் அடைந்தார். ஒரு மாதத்திற்கும் மேல் கடும் இன்னல்களுக்கு மத்தியில் விடாமுயற்சியோடு எவரெஸ்ட்டில் ஏறி சாதனை படைத்தார்.
உள்ளாடை தெரியும் குட்டை டாப் அணிந்து கிளாமரில் தெறிக்கவிடும் தமன்னா!
இவருக்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, இவரை நேரில் வழவழைத்து, வாழ்த்து கூறி கௌரவித்தார். சாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடும், குடும்பத்தினரின் ஆதரவுடனும் பெரிதாக எந்த ஒரு கட்டண பயிற்சியும் இல்லாமல், தனக்கு தானே சில மலைகளில் ஏறி பயிற்சி பெற்று பின்னர் எவரெஸ்ட் சிகரத்தையும் அடைந்தார் ராஜசேகர் பச்சை.
அஜித் நடிக்க உள்ள விடாமுயற்சி திரைப்படமும், இந்த வாரத்தில் படப்பிடிப்பு துவங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அஜித் நடிக்கும் இந்த படத்தை, இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளார். ஆக்ஷன் சப்ஜெட் கதையம்சத்துடன் இப்படம் எடுக்கப்பட உள்ளதாகவும், இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.