தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய மூன்று படங்களும் ஹாட்ரிக் ஹிட் அடித்ததால் நடிகர் கார்த்தியின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. குறிப்பாக பொன்னியின் செல்வன் திரைப்படம் கார்த்திக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனால் நடிகர் கார்த்திக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
ஜப்பான் படத்தை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படம், 96 பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் ஒரு படம், லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள கைதி 2, பி.எஸ்.மித்ரனின் சர்தார் 2 என நடிகர் கார்த்தி கைவசம் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது இந்த பட்டியலில் புது வரவாக இணைந்துள்ள திரைப்படம் தான் லிங்குசாமி இயக்க உள்ள படம்.
நடிகர் கார்த்தி ஏற்கனவே லிங்குசாமி இயக்கத்தில் பையா படத்தில் நடித்துள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தற்போது 13 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளதால், அது பையா படத்தின் 2-ம் பாகமாக இருக்குமா என்பது தான் ரசிகர்கள் மனதில் எழக்கூடிய கேள்வியாக இருக்கும். ஆனால் அவர்கள் இருவரும் இணைய உள்ள படம் பையா 2 இல்லை என்றும், அது புது கதைக்களத்தில் உருவாகும் படம் என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... ஷங்கர் இவ்ளோ நாள் சீக்ரெட்டா வச்சிருந்த விஷயம் லீக் ஆகிடுச்சே... இந்தியன் 2 படத்தின் மெயின் வில்லன் இவர்தானாம்