Throwback : தோனியின் வெறித்தனமான ரசிகனாக இருந்தும் CSK-விற்கு தீம் மியூசிக் போட மறுத்த அனிருத் - ஏன் தெரியுமா?

First Published Jun 6, 2023, 3:38 PM IST

ஐபிஎல் தொடரில் விளையாடும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இசையமைப்பாளர் அனிருத் தீம் மியூசிக் போட மறுத்தது ஏன் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அனிருத் தான் தற்போது இந்திய சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இசையமைப்பாளராக இருக்கிறார். கோலிவுட்டை தாண்டி தற்போது டோலிவுட், பாலிவுட்டிலும் அனிருத்திற்கான மவுசு எகிறிவிட்டது. தமிழில் இவர் கைவசம் இல்லாத பெரிய நடிகர்களின் படமே இல்லை என சொல்லும் அளவுக்கு, அஜித்தின் விடாமுயற்சி, விஜய்யின் லியோ, ரஜினியின் ஜெயிலர், கமலின் இந்தியன் 2 என அனைத்து உச்ச நட்சத்திரங்களின் படங்களும் அவர் கைவசம் உள்ளன.

இதுதவிர தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா, இந்தியில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடிக்கும் ஜவான் என அக்கட தேசத்திலும் அனிருத்தின் ஆதிக்கம் தான். இப்படி பிசியான இசையமைப்பாளராக இருக்கும் அனிருத், ஐபிஎல்-ல் இதுவரை 5 கோப்பைகளை வென்று நம்பர் 1 அணியாக திகழ்ந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு தீம் மியூசிக் போட்டுக்கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தையும் அவரே ஒரு பேட்டியில் வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

அதன்படி ஐபிஎல் தொடர் 2008-ல் ஆரம்பிக்கப்பட்டது. அந்த சமயத்தில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகவில்லை. அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சுயாதீன இசைக்கலைஞர்கள் இசையமைத்த ‘விசில் போடு’ என்கிற தீம் பாடல் வேறலெவல் ஹிட் ஆகி, பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது. 

இதையும் படியுங்கள்... ஷங்கர் இவ்ளோ நாள் சீக்ரெட்டா வச்சிருந்த விஷயம் லீக் ஆகிடுச்சே... இந்தியன் 2 படத்தின் மெயின் வில்லன் இவர்தானாம்

இதையடுத்து சிஎஸ்கே அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு, பின்னர் 2018-ல் மீண்டும் கம்பேக் கொடுத்து சாம்பியன் பட்டத்தையும் தட்டித்தூக்கியது. அந்த நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தினர் அனிருத்தை அணுகி, அவரிடம் சிஎஸ்கே-விற்காக ஒரு தீம் மியூசிக் இசையமைத்துக் கொடுக்குமாறு கேட்டனர். ஆனால் அனிருத் அவர்களிடம் நோ சொல்லிவிட்டாராம். என்னடா இது... சிஎஸ்கே-வின் தீவிர ரசிகனாக இருந்தும் அனிருத் இப்படி சொல்லிவிட்டாரே என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகிகள் ஷாக் ஆகிப்போக, அவர்களிடம் இசையமைக்க மறுத்ததற்கான காரணத்தையும் சொல்லி உள்ளார் அனி. அவர் சொன்ன காரணத்தை கேட்டு அவர்கள் அனைவரும் வாயடைத்துப் போனார்களாம்.

அப்படி என்ன சொன்னார் தெரியுமா, சிஎஸ்கே-விற்காக சுயாதீன இசைக் கலைஞர்கள் இசையமைத்த விசில் போடு பாடல் வைரல் ஹிட் ஆகிவிட்டது. நானும் அப்பாடலுக்கு மிகப்பெரிய ரசிகன். அந்த பாடல் உருவாக்கிய மேஜிக்கை நிச்சயம் என்னால் மீண்டும் கொண்டுவரவே முடியாது. நான் சென்னை மேட்ச் பார்க்கும்போது தோனி சிக்சர் அடித்தால் விசில் போடு பாட்டு தான் போடுவார்கள், அப்போது அதைக் கேட்கும் போது எனக்கே புல்லரிக்கும்.

நான் தற்போது சிஎஸ்கேவிற்காக புதிதாக ஒரு பாடலோ அல்லது தீம் மியூசிக்கோ தயார் செய்தாலும் என்னால் நிச்சயம் விசில் போடு பாடலை பீட் பண்ணவே முடியாது. ஏனெனில் அது ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் வேறலெவல். எப்படி சூப்பர்ஸ்டார்னு சொன்னால் அண்ணாமலை படத்தின் ஓப்பனிங் டைட்டில் கார்டு இசை ஞாபகத்துக்கு வருகிறதோ, அதேபோல் சிஎஸ்கே என்று சொன்னால் எப்போதுமே விசில் போடு பாட்டு தான். இதனால் தான் நான் தீம் மியூசிக் இசையமைக்க மறுத்துவிட்டேன் என கூறியுள்ளார் அனி.  இவ்வளவு பெரிய இசையமைப்பாளராக இருந்தும் சுயாதீன இசைக்கலைஞர்களின் இசையை அங்கீகரித்து, அவர்களின் பாடலுக்கும் மதிப்பளித்து அனிருத் செய்துள்ள இந்த செயலுக்கும் நிஜமாகவே ஒரு விசில் போடலாம்.

இதையும் படியுங்கள்... ‘விடாமுயற்சி’யில் திடீர் டுவிஸ்ட்... அஜித்தை அடிக்க மாஸ்டர் பட வில்லனை களமிறக்கும் மகிழ் திருமேனி

click me!