பிகினி போட்டோஷூட்டுக்கு தயாராகிறாரா குட்டி நயன்..! ரசிகர்களை கன்பியூஸ் ஆக்கிய அனிகாவின் இன்ஸ்டா பதிவு

Published : Jun 06, 2023, 02:05 PM IST

ரசிகர்களால் குட்டி நயன் என செல்லமாக அழைக்கப்படும் நடிகை அனிகா சுரேந்திரன், கடற்கரையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார்.

PREV
14
பிகினி போட்டோஷூட்டுக்கு தயாராகிறாரா குட்டி நயன்..! ரசிகர்களை கன்பியூஸ் ஆக்கிய அனிகாவின் இன்ஸ்டா பதிவு

கேரளாவை சேர்ந்தவர் அனிகா சுரேந்திரன். இவர் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும், இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது தமிழ் படங்கள் தான். தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ரிலீஸ் ஆன என்னை அறிந்தால் திரைப்படம் தான் அனிகாவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அப்படத்துக்கு பின்னர் அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

24

இதையடுத்து நானும் ரெளடி தான், ஜெயம் ரவியின் மிருதன், அஜித் மற்றும் நயன்தாராவின் மகளாக விஸ்வாசம், விஜய் சேதுபதியின் மாமன்னன் போன்ற படங்களில் நடித்து பேமஸ் ஆனார் அனிகா. நயன்தாராவின் சிறுவயது கதாபாத்திரங்களுக்கு அனிகா கச்சிதமாக பொருந்தியதால், ரசிகர்கள் அவரை குட்டி நயன் என செல்லமாக அழைத்து வருகின்றனர். தற்போது அனிகாவுக்கு 18 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால், அவர் ஹீரோயினாக மாறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... ஆதிபுருஷ் ரிலீசாகும் தியேட்டர்களில் ஒரு சீட் அனுமனுக்கு ஒதுக்கப்படும் - படக்குழு அறிவிப்பு

34

ஹீரோயின் ஆனதும், ஆரம்பத்திலேயே லிப்லாக் காட்சிகளில் நடித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தார் அனிகா. அதன்படி மலையாளத்தில் வெளிவந்த ஓ மை டார்லிங் திரைப்படத்தில் எக்கச்சக்கமான லிப்லாக் காட்சியில் நடித்திருந்தார் அனிகா. மலையாளத்தில் அறிமுகமான முதல் படத்திலேயே இப்படியா என திரையுலகினரே ஷாக் ஆகினர். அனிகா லிப்லாக் காட்சியில் நடித்திருந்தாலும், அப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாமல் தோல்வியை தழுவியது.

44

சமீப காலமாக கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் அனிகா, தற்போது கடற்கரையில் குட்டை டவுசர் அணிந்தபடி போஸ் கொடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதற்கு ஓபன் என கேப்ஷனும் கொடுத்துள்ளார். அனிகாவின் இந்த புகைப்படங்களை பார்த்து கன்பியூஸ் ஆன ரசிகர்கள், ஒருவேளை கடற்கரையில் பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தப்போகிறாரோ என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இதையும் படியுங்கள்... watch : திரில்லர் ஸ்டோரியில் தெறி பேபி ஆக மிரட்டும் சுனைனா - வைரலாகும் ரெஜினா டிரைலர் இதோ

click me!

Recommended Stories