நடிகர் அஜித்தின் 62-வது திரைப்படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்க உள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசையமைக்கிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மாதமே வெளிவந்தாலும், இன்னும் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை. தற்போது அஜித் - மகிழ் திருமேனி இருவருமே லண்டனுக்கு சென்றுள்ளனர். அவர்கள் இந்தியா திரும்பியதும் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது.
விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ள நிலையிலும், இப்படத்தில் அஜித்தை தவிர யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்கிற விவரத்தை வெளியிடாமல் படக்குழு சீக்ரெட் ஆக வைத்துள்ளது. இருப்பினும் அவ்வப்போது அதுபற்றி சில தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் சமீபத்தில் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க உள்ளதாக தகவல் கசிந்தது. இதன்மூலம் அஜித் உடன் 5-வது முறையாக கூட்டணி அமைக்க உள்ளார் திரிஷா.
இந்நிலையில், விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கப்போவது யார் என்கிற விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி மற்றும் விஜய்யின் மாஸ்டர் ஆகிய படங்களில் வில்லனாக மிரட்டிய நடிகர் அர்ஜுன் தாஸ் தான் இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளாராம். அர்ஜுன் தாஸ் தவிர மேலும் ஒரு முக்கிய வில்லன் கதாபாத்திரம் உள்ளதாம். அதில் முன்னணி நடிகர் ஒருவரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம் மகிழ் திருமேனி.
இதையும் படியுங்கள்... அஜித் வீட்டு மருமகள் ஆகப்போகிறாரா யாஷிகா? மகளின் காதல் விவகாரம் குறித்து உண்மையை போட்டுடைத்த தாய்