தமிழ் திரையுலகில், எத்தனையோ முன்னணி நடிகைகள் இருந்தாலும், ஒரு சில ஹீரோயின்களுக்கு உள்ள கிரேஸ் அவர்கள் வயதானாலும் கூட மாறிவிடுவது இல்லை. அதிலும் ரசிகர்கள் கோவில் கட்டும் அளவுக்கு தனக்கென ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர் குஷ்பு. ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, 80-பது மற்றும் 90-களில், தென்னிந்திய திரையுலக ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர்.