டைட்டானிக் என்கிற ஒற்றை திரைப்படத்தின் மூலம் உலகளவில் சினிமா ரசிகர்களின் மனதில் ஆழமாய் பதிந்த பெயர் தான் ஜேம்ஸ் கேமரூன். உலகமெங்கும் அவரை டைட்டானிக் திரைப்படம் கொண்டு சென்றாலும், அதன்பின் கர்ப்பனை திறனின் உச்சத்திற்கு சென்று அவர் இயக்கிய அவதார் படம் தான் ஜேம்ஸ் கேமரூனை தலைசிறந்த இயக்குனராக மாற்றியது. அவதார் படத்தின் முதல் பாகம் கடந்த 2009-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியதோடு, கிட்டத்தட்ட 3 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் வசூலித்து சாதனை படைத்தது.