விஜய்யின் 'வாரிசு' படத்தை தமிழ் - தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மூலம் தயாரித்து வருகிறார். தெலுங்கில் பல வெற்றி படங்களை இவர் தயாரித்துள்ளதோடு, அடுத்தடுத்து... பல முன்னணி நடிகர்களின் படங்களையும் தயாரித்து வருகிறது.
இந்த தகவலை கண்டு அதிர்ச்சியடைந்த தயாரிப்பு தரப்பு இப்படி பரவி வரும் தகவல் முற்றிலும் வதந்தி என்றும், இதனை கண்டு யாரும் ஏமாற வேண்டாம் என்கிற தகவலை தன்னுடைய அறிக்கையை வெளியிட்ட தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், எங்கள் நிறுவனம் தயாரித்து வரும் ’ஆர்சி 15’ எஸ்.வி.சி 50’ படங்கள் உள்பட எந்த படத்திற்கும் நாங்கள் அறிமுக நடிகர்களை தேர்வு செய்யவில்லை. இதுகுறித்து வெளியாகி வரும் அனைத்தும் செய்திகளும் முழுக்க முழுக்க வதந்தி. எனவே தயவு செய்து அந்த தகவலை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். என்று தெரிவித்துள்ளது. தற்போது இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்: கடைசில இப்படி ஆகிடுச்சே... அஜித்துக்கு பதிலா யாஷிகா..? செம்ம அப்செட்டான ரசிகர்கள்..!