கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல்வேறு திரையுலகிலும் பிசியான நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் தற்போது தி கிரே மேன் என்கிற ஹாலிவுட் படம் வெளியாகி உள்ளது. இப்படத்தில் அவிக் சான் என்கிற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். ரூஸோ சகோதரர்கள் இப்படத்தை இயக்கி உள்ளனர்.
இதுதவிர டோலிவுட்டில் வாத்தி, தமிழில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன், கேப்டன் மில்லர் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார் தனுஷ். இதில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் ஷூட்டிங் முடிந்து விரைவில் ரிலீசாக உள்ளன.
இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் தனுஷ், கடந்த ஜனவரி மாதம் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவிட்டு அவர் திடீரென விவாகரத்து செய்வதாக அறிவித்தது பலருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தது.
இருப்பினும் இருவரும் விவாகரத்துக்கான உண்மை காரணம் என்ன என்று இதுவரை ஓப்பனாக சொல்லவில்லை. இந்நிலையில், நடிகர் தனுஷுடன் பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலி கானின் மகளும், நடிகையுமான சாரா அலி கான் நெருக்கமாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தனுஷ் நடித்த கிரே மேன் படத்தின் இயக்குனர்கள் ரூஸோ சகோதரர்கள் சமீபத்தில் இந்தியா வந்திருந்தனர். அப்போது அவர்கள் ஒரு பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் ஏராளமான பாலிவுட் நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். அதேபோல் சாரா அலிகானும் அதில் கலந்துகொண்டார்.