சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் தான் இயக்கி உள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணனும், வில்லனாக கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமாரும் நடித்துள்ளார். மேலும் மோகன்லால், புஷ்பா பட வில்லன் சுனில், யோகிபாபு, நடிகை தமன்னா, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
அதுமட்டுமின்றி ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அதன்படி இப்படத்தின் ஆடியோ லாஞ்ச் அடுத்த மாதம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ள பிரபலங்கள் பற்றி தகவல் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
அதன்படி ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவருடன் லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் இதில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விழாவின் போது ரஜினி - லோகேஷ் கனகராஜ் இணையும் படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆனால் படக்குழு தரப்பில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இதையும் படியுங்கள்... கதை கேட்டதும் படம் பிளாப் ஆகும்னு சொன்னாரு.. ஆனாலும் நடிச்சாரு - அஜித் பற்றி பிரபல இயக்குனர் சொன்ன பகீர் தகவல்