சூர்யா நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். கங்குவா படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக உடல் எடையை அதிகரித்து நடித்து வருகிறார் சூர்யா. கங்குவா படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதத்தில் நிறைவடைந்துவிடும் என கூறப்படுவதால், சூர்யா அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது கேள்விக்குறியாக இருந்தது.
வெற்றிமாறனுக்காக அடுத்த ஆண்டு வரை காத்திருக்க முடியாது என முடிவெடுத்த சூர்யா, வாடிவாசல் படத்தை தள்ளிவைத்துவிட்டு, அதற்கு முன்னதாக ஒரு படத்தில் நடித்து முடிக்க பிளான் போட்டு உள்ளாராம். சூர்யா குறுகிய காலத்தில் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ள இந்த படத்தை சுதா கொங்கரா தான் இயக்குவார் என கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் சுதா கொங்கரா தற்போது சூரரைப் போற்று திரைப்படத்தின் இந்தி ரீமேக் பணிகளில் பிசியாக உள்ளார். இதில் அக்ஷய் குமார் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில் நடிகர் சூர்யாவும் முக்கியமான கேமியோ ரோலில் நடித்துள்ளதோடு, இப்படத்தை தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்தும் உள்ளார். சூரரைப்போற்று இந்தி ரீமேக் பணிகள் முடிவடைந்ததும், சூர்யா, சுதா கொங்கரா இணையும் புதிய படத்திற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... பிறந்தநாளுக்கு கவர்ச்சி விருந்து... முதன்முறையாக பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி அதகளப்படுத்திய தர்ஷா குப்தா