பிறந்தநாளுக்கு கவர்ச்சி விருந்து... முதன்முறையாக பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி அதகளப்படுத்திய தர்ஷா குப்தா

First Published | Jun 11, 2023, 1:34 PM IST

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையான தர்ஷா குப்தா, முதன்முறையாக பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி உள்ளார்.

போட்டோஷூட் மூலம் பிரபலமான நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். கொரோனா ஊரடங்கு சமயத்தில் சமூக வலைதளங்களில் பெரும்பாலான நேரத்தை செலவழித்து வந்த இளைஞர்களை கவரும் விதமாக தினசரி போட்டோஷூட் நடத்தி வந்தார் தர்ஷா குப்தா. அதன் பலனாக அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. ரசிகர் எண்ணிக்கை கூட கூட படிப்படியாக கவர்ச்சியையும் கூட்டி அதகளப்படுத்தி வந்தார் தர்ஷா.

இதையடுத்து சின்னத்திரை சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும், சட்டென சீரியலில் நடிக்கத்தொடங்கிய தர்ஷாவுக்கு திடீரென கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் குக் வித கோமாளி நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார் தர்ஷா குப்தா. அந்நிகழ்ச்சியில் அவரால் பைனல் வரை முன்னேற முடியாவிட்டாலும், அதன்மூலம் கிடைத்த புகழ்வெளிச்சத்தின் காரணமாக சினிமாவில் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.


அந்த வகையில் தர்ஷா குப்தா தமிழ் சினிமாவில் முதன்முதலில் நடித்த திரைப்படம் ருத்ர தாண்டவம். அப்படத்தை திரெளபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி இயக்கி இருந்தார். இதில் நடிகர் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷிக்கு ஜோடியாக நடித்திருந்தார் தர்ஷா. இதையடுத்து ஓ மை கோஸ்ட் என்கிற பேய் படத்தில் நடித்திருந்தார் தர்ஷா. இப்படத்தில் சன்னி லியோனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கே டஃப் கொடுக்கும் வகையில் கவர்ச்சியும் காட்டி இருந்தார் தர்ஷா.

இதையும் படியுங்கள்... வைரமுத்து எனக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார்... சின்மயியை தொடர்ந்து மற்றுமொரு பாடகி பரபரப்பு புகார்

தற்போது நடிகை தர்ஷா குப்தா நடிப்பில் மெடிக்கல் மிராக்கிள் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் யோகிபாபு தான் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தாலும், தன்னை ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆக்கிய போட்டோஷூட்களை தொடர்ந்து நடத்தி வருகின்றார் தர்ஷா குப்தா.

அந்த வகையில் அண்மையில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட அந்தமானுக்கு சென்றிருந்த நடிகை தர்ஷா குப்தா, அங்கு பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளிக்கும் விதமாக தான் முதன்முறையாக நடத்தியுள்ள பிகினி போட்டோஷூட்டின் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார் தர்ஷா. அந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகளும் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... மருதநாயகம் முதல் யோஹன் வரை... ஆஹா ஓஹோனு பில்-டப் கொடுத்து தொடங்கி பாதியிலேயே கைவிடப்பட்ட படங்களின் லிஸ்ட் இதோ

Latest Videos

click me!