இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் லிங்குசாமி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு முரளி, மம்முட்டி, அப்பாஸ், சினேகா நடிப்பில் வெளியான ஆனந்தம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். ஆனந்தம் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் மாதவன் உடன் கூட்டணி அமைத்த லிங்குசாமி, ரன் படத்தை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்ததோடு லிங்குசாமியின் கெரியரில் திருப்புமுனையையும் ஏற்படுத்தியது.