பொறுமையை சோதிக்கப்போகிறாரா விஜய்...? ஜன நாயகன் ரன் டைம் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

Published : Dec 16, 2025, 11:34 AM IST

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் வருகிற ஜனவரி மாதம் 9-ந் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், அப்படத்தின் ரன் டைம் பற்றிய அப்டேட் வெளியாகி இணையத்தில் வைரலாகிறது.

PREV
14
Jana Nayagan Run Time

நடிகர் விஜய்யின் 69-வது படம் ஜன நாயகன். இப்படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். நடிகர் விஜய் இப்படத்தோடு சினிமாவை விட்டு விலக முடிவெடுத்து உள்ளதால், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பே இப்படத்தின் மீது உள்ளது. இப்படத்தை கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்திற்காக நடிகர் விஜய் ரூ.275 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கிய ஹீரோ என்கிற பெருமையை பெற்றிருக்கிறார் விஜய்.

24
ஜன நாயகன் ரிலீஸ்

ஜன நாயகன் திரைப்படம் வருகிற 2026-ம் ஆண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு கொண்டுவர உள்ளனர். இப்படத்தை ஜனவரி 9-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். இப்படத்துக்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது. ஜன நாயகன் திரைப்படம் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது. இப்படம் விஜய் ரசிகர்களுக்கு பக்கா ட்ரீட் ஆக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் தான் இசையமைத்து உள்ளார்.

34
ஜன நாயகன் ஆடியோ லாஞ்ச்

ஜன நாயகன் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான தளபதி கச்சேரி பாடல் கடந்த மாதம் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு உள்ளனர். வருகிற டிசம்பர் 27-ந் தேதி ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா, தளபதி திருவிழா என்கிற பெயரில் மலேசியாவில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனையும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பிரபலங்களும் கலந்துகொள்ள உள்ளார்களாம்.

44
ஜன நாயகன் ரன் டைம்

இந்த நிலையில், ஜன நாயகன் திரைப்படத்தின் ரன் டைம் பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் ரன் டைம் 3 மணிநேரம் 6 நிமிடங்களாம். நடிகர் விஜய்யின் கெரியரில் நண்பன் படத்துக்கு அடுத்தபடியாக அதிக ரன் டைம் கொண்ட படம் இதுவாகும். நண்பன் திரைப்படம் 3 மணிநேரம் 8 நிமிடம் ரன் டைம் கொண்டிருந்தது. கடைசியாக விஜய் நடிப்பில் வெளிவந்த கோட் படம் 3 மணிநேரம் 3 நிமிடம் ரன் டைம் உடன் வெளியாகி இருந்தது. அப்படத்தின் நீளம் அதற்கு பின்னடைவாக அமைந்திருந்தது. ஜன நாயகனும் அதைவிட கூடுதல் ரன் டைம் கொண்டிருப்பதால், அதற்கு எந்த அளவு ரெஸ்பான்ஸ் கிடைக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories