ஜாடைமாடையாக பேசி வம்பிழுத்த அருணை அடிவெளுத்த முத்து - சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

Published : Dec 16, 2025, 09:46 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவுக்கும் அருணுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அடிதடி வரை சென்றிருக்கிறது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா தன்னிடம் மறைக்கும் உண்மை என்ன என்பதை தெரிந்துகொள்ள சீதாவிடம் கேட்ட நிலையில், அவர் மீனாவிடம் விசாரித்த பின்னர் முத்துவுக்கு போன் போட்டு பேசுகிறார். அப்போது, அக்கா உங்க அம்மாவுக்கு பயந்துகிட்டு தான் கிரிஷை தத்தெடுக்கும் முடிவுக்கு சம்மதிக்க மறுப்பதாக சொல்கிறார். ஆனால் முத்து அதனை ஏற்க மறுக்கிறார். அவள் சொன்னது பொய் என்றும், அவ எதையோ மறைக்கிறாள் என்றும் முத்து கூறுகிறார். ஆனால் அது என்னவென்று தான் தெரியவில்லை என்று முத்து சொல்ல, சீதாவும் போனை கட் பண்ணிவிடுகிறார்.

24
விஜயாவுக்கு சிந்தாமணி கொடுக்கும் ஐடியா

மறுபுறம் மீனாவின் தம்பி சத்யா, சிந்தாமணியின் மகளை அழைத்துக் கொண்டு யோகா கிளாசில் டிராப் பண்ணுகிறார். அப்போது அதைப்பார்க்கும் சிந்தாமணி, நீ எதுக்கு அவன்கூடலாம் பைக்ல வர்ற என கேட்க, அவன் என்னுடைய ஆபிஸில் வேலை செய்பவன் தான், என்னுடைய வண்டி ரிப்பேர் ஆனதால் அவனோடு வந்தேன் என சொல்கிறார். சிந்தாமணியின் மகளும் யோகா கற்றுக் கொள்ள சென்றிருக்கிறார். இதையடுத்து விஜயா, சிந்தாமணியிடம் கிரிஷை துரத்த ஐடியா கேட்கிறார். அப்போது அவன் மீது திருட்டு பழி போடச் சொல்கிறார் சிந்தாமணி. நீ இப்படி பண்ணுனா உன் கை, கால் விளங்காம போயிடும் என பார்வதி சொல்ல, அதை யோசித்து பார்த்து அந்த பிளானை டிராப் பண்ணிவிடுகிறார் விஜயா.

34
அருண் - முத்து மோதல்

அருணும் அவனுடைய நண்பனும் ஒரு டீக்கடையில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருக்க, அப்போது அங்கு முத்துவும் செல்வமும் வருகிறார்கள். இதைப்பார்த்த அருண், முத்துவை ஜாடைமாடையாக குத்திக்காட்டி பேசுகிறார். குழந்தை பிறக்காதவங்க தான தத்தெடுப்பாங்க, உடம்புல ஏதோ பிரச்சனை இருக்கு என முத்துவை சீண்டும் விதமாக பேசுகிறார். இதனால் கடுப்பாகும் முத்து, கோபத்தில் பொங்கியெழுந்து அருணை அடிவெளுக்கிறார். அருணின் சட்டை கிழியும் அளவுக்கு அவனை அடிச்சு துவம்சம் செய்கிறார். அப்போது அந்த வழியாக செல்லும் அண்ணாமலை இதைப் பார்த்ததும் ஓடி வந்து முத்துவுக்கு பளார் என அறைவிட்டு சண்டையை நிறுத்துகிறார்.

44
உண்மையை சொல்ல வந்த மீனா

பின்னர் வீட்டுக்கு இந்த பிரச்சனை கொண்டுசெல்லப்படுகிறது. அப்போது இதற்கெல்லாம் மீனா தான் காரணம் என்றும், அவள் சீதாவிடம் சொன்னதால் தான் அருண் தன்னை அவமானப்படுத்தியதாகவும் கூறுகிறார். அப்போது அனைவரும் மீனாவிடம், என்ன பிரச்சனை என கேட்கிறார்கள். இதனால் உண்மையை கூறும் மனநிலைக்கு வரும் மீனா, நான் எல்லாத்தையும் சொல்லிவிடுகிறேன் என கூறுகிறார். இதனால் ரோகிணிக்கு பயம் வந்துவிடுகிறது. அய்யய்யோ மீனா எல்லா உண்மையையும் சொல்லிவிடுவாளோ என டர் ஆகிறார். இதன் பின் என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories