சன் டிவியில் ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று விரைவில் முடிவுக்கு வர உள்ளதாம். அந்த சீரியலிற்கான கிளைமாக்ஸ் ஷூட்டிங்கும் நடைபெற்று வருகிறதாம்.
தொலைக்காட்சி தொடர்கள் முன்பெல்லாம் பல வருடங்களுக்கு ஓடும். ஆனால் தற்போது ஒரு சீரியல் ஒரு ஆண்டு தாக்குப் பிடிப்பதே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கையில் ஆயிரம் எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். கம்மியான சீரியல்களே அந்த மைல்கல்லை எட்டி இருக்கின்றன. அந்த வரிசையில் அண்மையில் ஆயிரம் எபிசோடுகளை எட்டிய சன் டிவி சீரியல் ஒன்று, அதனை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்திருந்தது. இந்த நிலையில், அந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ள தகவல் பலரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
24
முடிவடையப்போகும் சீரியல் எது?
அந்த சீரியல் வேறெதுவும் இல்லை... சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் தொடர் தான். இந்த சீரியல் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சீரியலில் அழகப்பன் ஹீரோவாக நடித்து வந்தார். அவருக்கு ஜோடியாக அனுஷா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த சீரியல் ஆரம்பத்தில் மாலை நேரத்தில் ஒளிபரப்பானதால் இதற்கான டிஆர்பி ரேட்டிங்கும் ஜெட் வேகத்தில் அதிகரித்த வண்ணம் இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு முதல் இந்த சீரியலின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டது. மாலையில் இருந்து மதிய வேளையில் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. இதனால் இதன் ரேட்டிங்கும் கம்மி ஆனது.
34
1000 எபிசோடுகளை கடந்த ஆனந்த ராகம் சீரியல்
படித்த புத்திசாலியான ஏழைப் பெண், படிக்காத பணக்கார வீட்டுப் பையனை திருமணம் செய்துகொண்டால் என்ன நடக்கும், அதனால் அந்த பெண் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன என்பதே இந்த சீரியலின் கதைக்கரு. இதில் கடந்த சில மாதங்களாக இதன் கதைக்களம் மந்தமானதால், ஹீரோயின் அனுஷாவின் கேரக்டரை இரட்டை வேடத்தில் கொண்டு வந்து சீரியலை நகர்த்தி கொண்டு சென்றனர். ஆனால் அதுவும் பெரியளவில் சோபிக்கவில்லை. டிஆர்பியிலும் இந்த சீரியலுக்கு பெரியளவில் ரேட்டிங் கிடைக்கவில்லை. இதனால் இந்த சீரியலை இழுத்து மூட முடிவெடுத்து உள்ளார்களாம்.
ஆனந்த ராகம் சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. அந்த சீரியலுக்கான கிளைமாக்ஸ் ஷூட்டிங் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஓடி வந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அந்த சீரியலை மாலை நேரத்திலேயே ஒளிபரப்பி வந்தால் கயல் சீரியல் போல் அதிகபட்ச டிஆர்பி ரேட்டிங் பெற்று சக்கைப்போடு போட்டிருக்கும் என்பதே ரசிகர்கள் கருத்தாக உள்ளது. ஆனந்த ராகம் சீரியல் முடிய உள்ளதால் அதற்கு பதிலாக வேறு என்ன புது சீரியல் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.