வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!

Published : Dec 15, 2025, 10:48 PM IST

Pandian Stores 2 Serial Dowry Harassment Threaten : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய 663ஆவது எபிசோடில் என்ன நடந்தது என்பதை ஹைலைட்ஸாக பார்க்கலாம்.

PREV
15
Pandian Stores 2 Serial Today Episode Highligts

தங்கமயில் அடுக்கடுக்கான பொய்களை சொன்ன உண்மை பாண்டியன் குடும்பத்தில் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. கடைசியில் அவரது அப்பா அம்மாவை வர வழைத்து வீட்டைவிட்டு துரத்திவிட்டனர். ஆனால், அவர்கள் வீட்டிற்கு வெளியில் நின்று கொண்டு மீண்டும் தங்களது டிராமாவை அரங்கேற்றினர். வாய்க்கு வந்ததை எல்லாம் பேசினர். மேலும், இவ்வளவு தூரம் நடந்த பிறகும் கூட இன்னும் பொய் சொல்வதை அவர்கள் நிறுத்தவே இல்லை. என்னுடைய மகளை இவர்களை நம்பி இந்த குடும்பத்தில் கட்டிக் கொடுத்தேன், ஆனால், அவர்கள் என்னுடைய மகளை வீட்டை விட்டு துரத்திவிட்டனர்.

25
Pandian Stores 2 Serial News Today

இந்த நிலையில் தான் கோமதியின் அண்ணன் சக்திவேல் என்ன பிரச்சனை என்று பாக்கியத்திடம் வந்து கேட்கவே, தினந்தோறும் வேதனை, சித்திரவதையை அனுபவிச்சிக்கிட்டே இருந்திருக்கிறார் என்று கண்ணீர்மல்க கதறி அழுதார். அவர் இதுதான் சந்தர்ப்பம் என்று வரதட்சணை கொடுமை பேரில் போலீசில் புகார் கொடுங்கள். எனக்கு தெரிந்த இன்ஸ்பெக்டர் இருக்கிறார். வரதட்சணை பத்தவில்லை, அதனால் வீட்டிலிருந்து பணம் வாங்கி வரச்சொல்லி உங்களது மகளை கொடுமைப்படுத்துறாங்க என்று புகார் கொடுங்கள். இன்ஸ்பெக்டரில் சொன்னால் போதும் உள்ளே தூக்கி வச்சிருவாங்க என்றூ பாக்கியத்தை ஏத்திவிட்டார்.

35
Pandian Stores 2 Bakiyam Daughter Torture,

பாண்டியனை உள்ளே வைத்து முட்டிக்கு முட்டி தட்டினால் எல்லா பிரச்சனையும் சரியாகிவிடும் என்றார். இதையடுத்து ஆத்திரத்துடன் வெளியில் வந்த பாண்டியன், சக்திவேலை நெஞ்சிலேயே மிதித்தார். அவர் மிதித்ததில் நிலை தடுமாறி சக்திவேல் கீழே விழுந்தார். அதன் பிறகு முத்துவேல் பாண்டியன், குமரவேல், செந்தில், கதிர் என்று எல்லோரும் அடிதடியில் ஈடுபட்டனர். இனிமேல் என்னுடைய தம்பி மீது கை வைத்த உன்ன சும்மா விடமாட்டேன் என்று முத்துவேல் பாண்டியனுக்கு வார்னிங் கொடுத்தார்.

45
Bakiyam Police Complaint Plan

தங்கமயில் சரவணன் பிரச்சனையில் மூக்கை நுழைத்து கடைசியில் சக்திவேல் வாங்கி கட்டிக் கொண்டார். அதன் பிறகு தங்கமயில் சரவணனிடம் வந்து பேச. இனிமேலும் இங்கு யாரும் இருக்க வேண்டாம். கிளம்பி போய்விடுவது நல்லது என்றார். மேலும் ஊரார் முன்னிலையில் தங்கமயிலும், அவரது குடும்பத்தினரும் என்னென்ன பொய் எல்லாம் சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா? அவர்கள் சொன்னது போன்று உங்களது வீட்டில் யாரேனும் சொல்லியிருந்தால் நீங்கள் என்ன பண்ணியிருப்பீங்க. 

55
Pandian Stores 2 Dowry Harassment

நீங்கள் என்ன செய்வீர்களோ அதைத்தான் நாங்களும் செய்திருக்கிறோம் என்றார். இங்கிருந்து கிளம்ப முடியாது. என்னுடைய மகளின் வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ள எந்த எல்லைக்கும் நான் போவேன். நடந்தது நடந்துவிட்டது. பேசி தீர்த்துக் கொள்ளலாம். இல்லையென்றால் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று நினைக்காதீங்க. போலீஸ் கேஸ் என்று இழுத்து வைத்துவிடுவேன். இந்த குடும்பத்தை நிம்மதியாகவே வாழ விடமாட்டேன் என்றார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 663ஆவது எபிசோடு முடிந்தது. இனி அடுத்து என்ன நடக்கிறது என்று நாளைய எபிசோடில் பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories