Revathi Suicide Attempt Karthik Love Tragedy : கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய 1062ஆவது எபிசோடில் கார்த்திக் உடனான திருமண வாழ்க்கையை முறித்த நிலையில் ரேவதி விஷம் குடித்துள்ளார்.
கார்த்திகை தீபம் சீரியலில் இப்போது ரேவதி மற்றும் கார்த்திக் இடையிலான காதல் திருமண வாழ்க்கை பெரும் போராட்டமாக மாறி வருகிறது. கார்த்திக் வீட்டை விட்டு துரத்தப்பட்ட நிலையில் தன்னை கொலை செய்ய பார்க்கிறார் என்று சந்திரகலா தனக்கு தானே கத்தியால் குத்திக் கொண்டு அக்காவிம் கூறவே, அவரும் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து கார்த்திக்கை போலீசார் கைது செய்து லாக்கப்பில் அடைத்தனர். இது குறித்த ரேவதிக்கு தெரியவர போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கார்த்திக்கை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
25
Revathi Suicide Attempt Serial
அப்போதுதான் அவருக்கு ஒரு விஷயம் தெரிய வந்தது. அதாவது கார்த்திக் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரிந்து உடனே தனது அம்மாவிடம் சென்று இந்த புகாரை வாபஸ் பெற கேட்டார். ஆனால், அவரோ முடியாது என்று மறுக்கவே பல வழிகளில் முயற்சி செய்தார். அப்போதுதான் சந்திரகலா கார்த்திக் மற்றும் ரேவதி உறவை பிரிக்க ஐடியா கொடுக்க பஞ்சாயத்தை கூட்டினார்.
35
Karthik Revathi Love Tragedy, Revathi Cannot Live Without Karthik,
ஆனால், பரமேஸ்வரி இதற்கு மறுப்பு தெரிவிக்க, ரேவதி இதற்கு ஒரு போதும் சம்மதிக்க மாட்டார் என்றார். பிறகு சம்பந்த்ப்பட்டவர்கள் இல்லாமல் பஞ்சாயத்து சொல்ல முடியாது, அதனால், முதலில் ரேவதியை கூட்டிக் கொண்டு வாங்க என்று சொல்ல சாமுண்டீஸ்வரி ரேவதியிடம் கோர்ட் கேஸ் சென்றால் நீண்ட காலமாகும். அதனால் பஞ்சாயத்தில் வந்து நீ கார்த்திக்கை பிடிக்கவில்லை என்று சொல்லி திருமணத்தை முறித்துக் கொள்ள வேண்டும் என்றார். அதற்கு தனது கணவருக்கு இருக்கும் ஆபத்தை கருத்தில் கொண்டு சம்மதம் சொன்னார். அதோடு ஒரு கண்டிஷனும் போட்டார். அதாவது இந்த புகாரை வாபஸ் வாங்கினால் நான் கார்த்திக்கை பிரிகிறேன் என்றார்.
45
Revathi Drinks Poison, Revathi Fighting For Life
அப்படியே கேஸை வாபஸ் வாங்கவே கார்த்திக் மற்றும் ரேவதிக்கு இடையிலான திருமண பந்தம் காசு வெட்டிப் போட்டு இன்றோடு முடிவுக்கு வருகிறது என்று கோயில் பூசாரியால் அறிவிக்கப்பட்டது. கார்த்திக்கை உண்மையாக காதலித்த ரேவதியால் இந்த பிரிவை தாங்க முடியாத நிலையில் வீட்டில் கதவை பூட்டிக் கொண்டு என்ன மன்னிச்சிடு கார்த்திக்; நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று கூறி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதைக் கண்ட ரோகிணி அதிர்ச்சி அடையவே குடும்பத்தினர் அனைவரும் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
55
Revathi Serial News
இதைப் பற்றி அறிந்த கார்த்திக் ரேவதியை பார்க்க மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அவரிடம் இனிமேல் நீ இப்படி செய்யமாட்டேன் என்று சத்தியம் பண்ணும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டார். அதோடு கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய 1062ஆவது எபிசோடுக்கான புரோமோ முடிந்தது. இனி அடுத்து என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.