கிரிஷை தத்தெடுக்க மறுத்தது ஏன்? முத்துவிடம் மூடிமறைத்த உண்மையை சீதாவிடம் போட்டுடைத்த மீனா - சிறகடிக்க ஆசை

Published : Dec 15, 2025, 11:18 AM IST

விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷை தத்தெடுக்க மறுத்ததற்கான காரணம் என்ன என சீதா கேட்டதற்கு மீனா என்ன சொன்னார் என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷை தத்தெடுக்க வேண்டும் என முத்து ஆசைப்பட்ட நிலையில், அதற்கு மீனா சம்மதிக்க மறுத்துவிட்டார். இதனால் முத்து - மீனா இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மீனா மீதுள்ள கோபத்தில் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த முத்து மறுபடியும் அதைப்பற்றி கேட்க, மீனா எந்த உண்மையையும் சொல்லாமல் மூடி மறைக்கிறார். இதையடுத்து ரோகிணியை அழைத்து அவரிடம் முத்து கிரிஷை தத்தெடுக்க விரும்பிய விஷயத்தை கூறினார். இதையடுத்து மீனா எடுத்த முடிவு என்ன? ரோகிணியின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன? இன்றைய எபிசோடில் என்ன நடந்தது? என்பதை பார்க்கலாம்.

24
டார் டாராக கிழித்த விஜயா

கிரிஷ் மீது மனோஜுக்கு பாசம் வரவேண்டும் என்பதற்காக ரோகிணி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். அதில் ஒன்றாக, மனோஜை தத்ரூபமாக வரைந்து, அந்த ஓவியத்தை கிரிஷிடம் கொடுத்து, இதை நீ வரைந்ததாக சொல்லுமாறு சொல்கிறார். கிரிஷும் அதை மனோஜிடம் எடுத்துக் கொண்டு காட்ட அவர் கிரிஷை பாராட்டுகிறார். பின்னர் அங்கிருந்த முத்து, அண்ணாமலை ஆகியோரும் கிரிஷின் ஓவியத்தை வியந்து பாராட்டுகின்றனர். ஆனால் விஜயா மட்டும் அங்கு வந்து அந்த ஓவியத்தை பார்த்து கடுப்பாகி, அதை டார், டாராக கிழித்து போடுகிறார். இதன்பின் அண்ணாமலை விஜயாவை திட்டுகிறார்.

34
பிளான் போடும் ரோகிணி

பின்னர் தன்னுடைய தோழி மகேஸ்வரி வீட்டுக்கு கிளம்பி செல்லும் ரோகிணி, அங்கு முத்து கிரிஷை தத்தெடுக்க விரும்பிய விஷயத்தை பற்றி தன்னுடைய தோழிகளான வித்யா மற்றும் மகேஸ்வரியிடம் ஆலோசிக்கிறார். அப்போது நீ உண்மையை ஒத்துக்கொள் என்று வித்யா சொல்ல, அதற்கு செவிசாய்க்க மறுக்கும் ரோகிணி, அடுத்து என்ன பொய் சொல்லலாம் என பிளான் போடுகிறார். குறிப்பாக முத்து கிரிஷை தத்தெடுக்கும் முடிவை கைவிட, தன்னுடைய அம்மாவை வரவைத்து, கிரிஷை நாங்கள் தத்துக் கொடுக்க மாட்டோம் என்று சொல்லச் சொல்ல இருப்பதாக கூறுகிறார்.

44
மீனா கூறும் உண்மை

மறுபுறம் இந்த தத்தெடுக்கும் விவகாரத்தில் மீனா மறுப்பதற்கான காரணத்தை தெரிந்துகொள்ள சீதாவை சந்தித்து பேசுகிறார் முத்து. இதையடுத்து சீதா இதுபற்றி தெரிந்துகொள்ள மீனாவை தன்னுடைய அம்மாவீட்டிற்கு வர சொல்லி எதற்காக கிரிஷை தத்தெடுக்க மறுக்கிறாய் என கேட்கிறார் சீதா. அதற்கு மீனா, கிரிஷை ததெடுப்பதற்கு அத்தை ஒத்துக்கவே மாட்டாங்க. இதனால வீட்டுக்குள்ள வீணா சண்டை தான் வரும். அது அவருக்கு புரியாது. அதனால் தான் நான் மறுத்துவிட்டேன் என கூறுகிறார். சரி இதை ஏன் மாமா கிட்ட நீ சொல்லவில்லை என சீதா கேட்க, அதற்கு பதில் சொல்லாமல் கிளம்பி செல்கிறார் மீனா. இதையடுத்து என்ன நடந்தது என்பது இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories