ஆதி குணசேகரனுக்கு ஆட்டம் காட்டும் அப்பத்தா.. அறிவுக்கரசி எடுக்கும் எதிர்பாரா முடிவு - களம் மாறும் எதிர்நீச்சல்

Published : Dec 15, 2025, 09:03 AM IST

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அப்பத்தாவின் வரவால் ஆதி குணசேகரனின் பிளான் மொத்தமும் சொதப்பி இருக்கிறது. இதனால் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி தொடங்க உள்ள புது பிசினஸுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக அவர்களுக்கு எதிராக ஆதி குணசேகரன் போலீஸில் புகார் அளித்த நிலையில், நேற்றைய எபிசோடில் போலீசுடன் வீட்டுக்கு வந்த குணசேகரன் தரப்பு வக்கீல், அங்குள்ள பெண்கள் அனைவரையும் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதோடு, அவர்களை போலீஸ் உதவியும் வெளியே துரத்த முயல்கையில் மாஸாக எண்ட்ரி கொடுத்த அப்பத்தா, இந்த சொத்து குணசேகரனுக்கு மட்டும் சொந்தமில்லை என்றும், இதில் இவர்களுக்கும் பங்கு இருப்பதாக கூறி ட்விஸ்ட் கொடுக்க, அனைவரும் ஷாக் ஆகிப்போனார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

24
அதகளம் செய்யும் அப்பத்தா

வீட்டின் உள்ளே அழைத்து சென்று போலீஸிடம் அனைத்து டாக்குமெண்டுகளையும் அப்பத்தா கொடுத்த நிலையில், இந்த வழக்கில் குழப்பம் இருப்பதால் தற்போதைக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது என போலீஸ் கிளம்பிச் செல்ல, அதன்பின்னர் ஜனனி, அப்பத்தாவை மாடிக்கு அழைத்து சென்று பேசுகிறார். அப்போது பார்கவியை பார்த்து, எவ்வளவோ கஷ்டத்தை தாண்டி நீ வந்திருக்க, வந்தது முக்கியமில்லை, எதையும் நீ விட்டுக்கொடுத்துவிடக் கூடாது என சொல்கிறார்.

அப்போது தங்கள் தமிழ் சோறு ஃபுட் டிரக் திறப்பு விழாவுக்கு நீங்க கண்டிப்பா வரணும் அப்பத்தா என ஜனனி கேட்க, அதற்கு, அவர் நான் வர்றதாவே இருக்கட்டும், உங்க கடையை யார் திறந்து வைப்பார்கள் என கேட்டு ஜனனியை லாக் பண்ணுகிறார்.

34
அறிவுக்கரசி கொடுக்கும் ஐடியா

மறுபுறம் ஆதி குணசேகரனுக்கு போன் போட்டு பேசும் அறிவுக்கரசி, போலீஸ் உங்களை வலைவீசி தேடிக் கொண்டிருப்பதாக சொல்கிறார். இதுக்கப்புறம் நமக்கு டைம் கிடையாது. எதுவாக இருந்தாலும் முடிச்சு விட்டுறனும் என கூறுகிறார். இதைக்கேட்ட ஆதி குணசேகரன், ஞானம், கதிர் ஆகியோர் ஷாக் ஆகிறார்கள். அப்பத்தாவின் வரவால் ஆட்டம் கண்டிருக்கும் ஆதி குணசேகரன் கேங்கின் அடுத்த மூவ் என்ன என்பது புரியாத புதிராக உள்ளது. ஏற்கனவே கொலை கேஸில் அறிவுக்கரசி ஜெயிலுக்கு சென்றவர் என்பதால், அவரை வைத்து அடுத்த ஆளை போட்டுத்தள்ள குணசேகரன் பிளான் போடவும் வாய்ப்பு உள்ளது.

44
எதிர்நீச்சலில் அடுத்த ட்விஸ்ட் என்ன?

அதுமட்டுமின்றி விசாலாட்சியின் அண்ணன் சாமியாடி ஒருமுறை வீட்டுக்கு வந்தபோது இந்த வீட்டில் பெரிய உசுரு ஒன்னு போகப் போகுது என கூறி இருந்தார். இதனால் அந்த பெரிய உசுரு அப்பத்தாவா அல்லது விசாலாட்சியா என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது. விசாலாட்சி தற்போது ஆதி குணசேகரனுக்கு எதிராக மாறி உள்ளதால், அவர் மீதும் செம கோபத்தில் இருக்கிறார் ஆதி. இதனால் அடுத்து என்ன சம்பவம் நடக்கப்போகிறது? ஜனனியின் ஃபுட் பிசினஸ் வெற்றிகரமாக தொடங்கப்படுமா? அதை தடுக்க ஆதி குணசேகரன் என்னவெல்லாம் செய்யப்போகிறார் என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories