என் வாழ்க்கையை அழிக்க இவர்கள் ரெண்டு பேர் போதும்: மர்ம முடிச்சைப் போட்ட மயில்; யார் அந்த ரெண்டு பேர்?

Published : Dec 14, 2025, 05:59 PM IST

Thangamayil Reveals Secret 2 People Ruining Her Life : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் வீட்டை விட்டு துரத்தப்பட்ட மயில் தனது வாழ்க்கையை அழிக்க இவர்கள் ரெண்டு பேர் தான் காரணம் என்று கூறும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

PREV
15
Thangamayil Reveals Secret 2 People Ruining Her Life

ஒரு பொய் இல்ல 3 பொய் சொன்னதற்காக தங்கமயில் வீட்டைவிட்டு துரத்தப்பட்டுள்ளார். கணவன் மனைவிக்கிடையில் எந்த ஒளிவு மறைவு இருக்க கூடாது என்பார்கள். ஆனால், இங்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கணவன் மட்டுமின்றி அவரது குடும்பத்திடம் அடுக்கடுக்காக பொய்களை சொல்லி வாழ்க்கையை தொலைத்து விட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார் மயில்.

பெற்றோர்கள் பார்த்து வைத்து நடந்ததுதான் சரவணன் மற்றும் தங்கமயில் திருமணம். ஆரம்பத்தில் சரவணன் மட்டுமின்றி பாண்டியன் குடும்பம் தங்களை பெருமையாக எண்ணிக் கொண்டது. காரணம், மயில் எம் ஏ வரை படித்திருக்கிறார். அதுவும் டபுள் டிகிரி. அதோடு வேலைக்கும் செல்கிறார். குடும்பத்திற்கு ஏற்ற மருமகள் என்று பாண்டியன் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்.

25
Pandian Stores 2 Mayil Secret

ஆனால், ஒரு கட்டத்தில் சரவணனுக்கு ஒவ்வொரு உண்மையும் தெரிய வர அவரால் அப்பா அம்மாவிடம் சொல்ல முடியாமல் தவித்து வந்தார். மேலும், அவர் சொல்லாததற்கு குடும்ப சூழலும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது. எப்போதெல்லாம் குடும்பத்தில் சொல்லிவிடலாம் என்று வரும் போது ஏதாவது பிரச்சனை வந்து கொண்டே இருந்தது.

அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மயில், உங்களது மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்று வாய்க்கூசாமல் பொய் சொன்னார். இந்த நிலையில் தான் இக்கட்டான சூழலில் சரவணன் மயிலைப் பற்றிய எல்லா உண்மைகளையும் சொல்லி இத்தனை நாட்களாக தான் பட்டு வந்த கஷ்டங்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.

35
Bakiyalakshmi Thangamayil Twist

இதையடுத்து தங்கமயிலின் அப்பா, அம்மாவை வர வழைத்து தங்கமயில் பிரச்சனைக்கு பஞ்சாயத்து பண்ணி அவரை வீட்டைவிட்டு துரத்திவிட்டனர். பஞ்சாயத்து பண்ணும் போது கூட தான் மறைத்து வைத்திருந்த நகை மேட்டரை கூட அவர்கள் யாரும் சொல்லவில்லை. இந்த நகை விஷயம் மீனா, ராஜீ மற்றும் கதிருக்கு தெரியும். அவர்களும் இதைப்பற்றி வாயத் திறக்கவில்லை. இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான புரோமோவை விஜய் டிவி வெளியிட்டது. அதில், வீட்டை விட்டு துரத்தப்பட்ட மயில் வீட்டு வாசலில் தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் சரவணன் நீ இங்கிருந்து கிளம்பவில்லை என்றால் என்னுடைய சாவுக்கு நீ, உன்னுடைய அம்மா, அப்பா தான் காரணம் என்று லெட்டர் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார்.

45
Thangamayil Exposes Plot

அதோடு தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கேட்டார். அதோடு புரோமோ முடிந்தது. இனி இந்த வாரம் இல்லை. அடுத்த வாரம் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருண்டு பார்க்கலாம். இந்த நிலையில் தான் தங்கமயிலை அழ அழ கதற வைத்துவிட்டு கடைசியில் ஹாய் சொல்ல சொல்றாங்க பாருங்க. எப்படி அழறங்க பார்ங்க. இவங்க சொன்ன பொய்யால் எப்படி அழறாங்க பாருங்கள் என்று அவருடைய அப்பா, அம்மாவை கை காட்டுகிறார். இதையடுத்து தனது மகள் தங்கமயிலை அழ வைத்தவர்களை நான் சும்மாவே விடமாட்டேன் என்று ரிவெஞ்ச் எடுக்கிறார். 

55
Mayil Emotional Confession

பாண்டியன் குடும்பத்தை எப்படி கதற விடப் போகிறேன் என்று பாருங்கள் என்று தனது கணவரிடம் கேட்க, அவரோ பாக்கியம் இவர்கள் எல்லாம் பெரிய இடம். எப்படி கதற விட போகிற கேட்க, அதற்கு என்ன பெரிய இடம், அவரகள் பெரிய இடமா இல்ல நம்ம பெரிய ஆளுங்களா என்று பார்த்துவிடுவோம் என்கிறார். இதற்கு மாணிக்கம், உன் மீது நம்பிக்கை இருக்கிறது. கண்டிப்பாக மயிலை அந்த வீட்டிற்குள் திரும்ப அனுப்பிவிடுவோம் என்றார். ஆனால், பண்றது எல்லாம் பிராடுத்தனம். இதில் எப்படியெல்லாம் வைராக்கியமாக வசனம் பேசுறாங்க பாருங்க. இவர்கள் ரெண்டு பேரால் தான் தங்கமயில் வாழ்க்கை சீரழிகிறது. யாராவது இவர்களிடம் சொல்லி இவர்களை தடுத்து நிறுத்துங்கள் என்றார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories