காசு வெட்டி போட்டு திருமணத்தை முறித்து கொண்ட கார்த்திக் ரேவதி

Published : Dec 15, 2025, 02:53 PM IST

கார்த்திகை தீபம் சீரியலில், இன்றைய எபிசோடு புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் காசு வெட்டி பே ாட்டு  மற்றும் ரேவதி திருமண உறவை முறித்துக்  - கொள்ளும் காட்சி இடம் பெற்றுள்ளது.

PREV
15
Karthigai Deepam Serial Today 1061 Episode Highlights

கார்த்திகை தீபம் சீரியலில், சந்திரகலா தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்டு, கார்த்திக் மீது பழிபோட்டார். இதனால் கோபமடைந்த சாமுண்டீஸ்வரி போலீசில் புகார் அளிக்க, கார்த்திக் கைது செய்யப்பட்டார்.

25
Karthik and Revathi Separation in Karthigai Deepam

கார்த்திக் மீது கோபத்தில் உள்ள இன்ஸ்பெக்டர், அவரைக் கொல்ல திட்டமிடுகிறார். இதனிடையே, சந்திரகலா யோசனைப்படி சாமுண்டீஸ்வரி பஞ்சாயத்தைக் கூட்டினார். கார்த்திக்-ரேவதி உறவை முறிக்க வேண்டும் என அவர் கூற, பரமேஸ்வரி அதிர்ச்சியடைந்தார்.

35
Karthigai Deepam Serial Today Episode Highlights

ரேவதியிடம் கேட்க வேண்டும் எனச் சொல்ல, சாமுண்டீஸ்வரி அவரை அழைத்தார். கணவரை போலீஸ் கொல்ல திட்டமிடுவதை அறிந்த ரேவதி, விவாகரத்துக்கு சம்மதித்தார். ஆனால், கார்த்திக் மீதான புகாரை வாபஸ் பெற வேண்டும் என நிபந்தனை விதித்தார்.

45
Karthigai Deepam Serial Update

சாமுண்டீஸ்வரி மறுக்க, இருவரும் பிரிந்தால் போதும் என சந்திரகலா சமாதானம் செய்தார். இதற்கிடையே, கார்த்திக்கிற்கு உணவில் இன்ஸ்பெக்டர் விஷம் கலந்தார். அப்போது சாமுண்டீஸ்வரி புகாரை வாபஸ் பெற காவல் நிலையம் வந்தார். பின்னர் கார்த்திக் விடுவிக்கப்பட அனைவரும் கோயிலுக்கு சென்றனர்.

55
Chamundeshwari Breaks Relation

அதில் திருமண உறவை முறித்துக் கொள்ள காசு வெட்டி போடுகின்றனர். உண்மையில் இப்படி நடந்தால் சீரியலுக்கு எதிர்ப்பு கிளம்பும். உண்மையாக கார்த்திக்கை நேசித்த ரேவதியால் எப்படி கார்த்திக்கை பிரிய முடியும். ஆனால் இங்கு அதுதான் நடக்கிறது. சரி என்னதான் நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories