தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது லியோ என்கிற படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி லியோ திரைப்படம் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், தளபதி 68 படத்திற்காக விஜய் வாங்க உள்ள சம்பளம் தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. அதன்படி தளபதி 68 படத்தில் நடிக்க நடிகர் விஜய்க்கு ரூ.200 கோடி சம்பளமாக வழங்க ஏஜிஎஸ் நிறுவனம் முன்வந்து உள்ளதாம். இதன்மூலம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்கிற பட்டியலில் ரஜினியை முந்தி நடிகர் விஜய் முதலிடம் பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் விஜய் உருவெடுத்துள்ளார்.
விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு உடன் கூட்டணி அமைப்பது இதுவே முதன்முறை ஆகும். சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த கஸ்டடி திரைப்படம் தோல்வியடைந்தபோதும், அவருக்கு நடிகர் விஜய் வாய்ப்பளித்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இதற்கு முன்னர் மங்காத்தா, மாநாடு போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை வெங்கட் பிரபு இயக்கி உள்ளதால், விஜய் படமும் அந்த அளவுக்கு பிரம்மாண்ட வெற்றியை ருசிக்கும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இதையும் படியுங்கள்... ரஜினியை தொடர்ந்து கமல்ஹாசன் உடன் கூட்டணி அமைக்கும் நெல்சன்... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!