சினிமாவை விட்டு விலகும் சூப்பர்ஸ்டார்..! ரஜினியின் கடைசி படத்தை கன்பார்ம் பண்ணிய மிஷ்கின்- ரசிகர்கள் அதிர்ச்சி

First Published | May 18, 2023, 8:39 AM IST

தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், நடிக்க உள்ள கடைசி படம் குறித்து இயக்குனர் மிஷ்கின் சமீபத்திய பேட்டியில் பேசி உள்ளார்.

இந்திய அளவில் மிகவும் டிமாண்ட் உள்ள இயக்குனராக உருவெடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். மாநகரம் தொடங்கி விக்ரம் வரை வரிசையாக 4 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த லோகி, அடுத்ததாக விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்யுடன் திரிஷா, மிஷ்கின், கவுதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், சாண்டி, பிரியா ஆனந்த், பிக்பாஸ் ஜனனி, மேத்யூ தாமஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை இன்னும் ஓரிரு மாதங்களில் முடித்து, படத்தை வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி திரைக்கு கொண்டுவர உள்ளதாக அறிவித்துள்ளனர். லியோ படத்திற்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் கைவசம் கைதி 2, விக்ரம் படத்தின் அடுத்த பாகம், சூர்யாவின் இரும்புக்கை மாயாவி என வரிசையாக படங்கள் குவிந்த வண்ணம் உள்ளன. 

Tap to resize

இதனிடையே சமீபத்தில் திடீர் டுவிஸ்டாக லியோவுக்கு பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியானது. லோகேஷை அழைத்து ரஜினிகாந்த், தனக்கு ஒரு ஸ்கிரிப்ட் தயார் செய்ய சொன்னதாகவும், அதுவே அவரது கடைசி படமாக இருக்கும் என்றும் தகவல்கள் பரவி வந்தன. இதனை இயக்குனர் மிஷ்கின் சமீபத்திய பேட்டியில் கன்பார்ம் பண்ணி உள்ளார்.

இதையும் படியுங்கள்... விஷ்ணுகாந்த் இதுக்கு மேல உனக்கு மரியாதையே இல்ல.. உறவினரை மிரட்டியதால் போலீஸ் வரை சென்ற சம்யுக்தா!

யூடியூப் சேனல் ஒன்றுக்கு இயக்குனர் மிஷ்கின் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், லோகேஷ் குறித்து பேசுகையில், “அவன் இந்திய அளவில் பெரிய லெவலில் வந்துகொண்டிருக்கிறான். அடுத்ததா ரஜினி சாரை வச்சு படம் பண்ணப்போறான். அது மிகவும் பெருமைப்படக்கூடிய விஷயம். அது ரஜினியோட கடைசி படம்னு சொல்றாங்க” என கூறி உள்ளார். இதன்மூலம் ரஜினியின் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்க உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் தயாராகி உள்ளது. நெல்சன் இயக்கியுள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக அவர் தனது மகள் இயக்கும் லால் சலாம் படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். இதுதவிர ஜெய்பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இந்த படங்களையெல்லாம் முடித்த பின்னர் ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... திருமணமான ஒரே வருடத்தில் டைவர்ஸ்! முதல் முறையாக விவாகரத்து குறித்து பேசிய நடிகை சுகன்யா!

Latest Videos

click me!