ரஜினியை தொடர்ந்து கமல்ஹாசன் உடன் கூட்டணி அமைக்கும் நெல்சன்... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!

First Published | May 18, 2023, 9:33 AM IST

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் நெல்சன், அடுத்ததாக கமல்ஹாசன் உடன் கூட்டணி அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய்யின் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ள இப்படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராப், புஷ்பா வில்லன் சுனில், கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவராஜ்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.

ஜெயிலர் படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைகாண உள்ளது. ஜெயிலர் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இயக்குனர் நெல்சன் தற்போது பிசியாக உள்ளார். இந்த நிலையில், அவர் இயக்க உள்ள அடுத்த படம் குறித்த அப்டேட் கடந்த நில தினங்களுக்கு முன்னர் லீக்கானது. அதன்படி நெல்சன் அடுத்ததாக தனுஷ் உடன் கூட்டணி அமைக்க உள்ளதாகவும், தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் தனுஷ், அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் நெல்சன் இயக்கத்தில் நடிப்பார் என கூறப்பட்டது.

இதையும் படியுங்கள்... சினிமாவை விட்டு விலகும் சூப்பர்ஸ்டார்..! ரஜினியின் கடைசி படத்தை கன்பார்ம் பண்ணிய மிஷ்கின்- ரசிகர்கள் அதிர்ச்சி

Tap to resize

இந்நிலையில், நெல்சன் - தனுஷ் கூட்டணியில் உருவாக உள்ள படம் குறித்த மேலும் ஒரு ஹாட் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோர் நடித்து வரும் நிலையில், தற்போது அந்த பட்டியலில் தனுஷும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் கடைசியாக தயாரித்த விக்ரம் படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. அப்படத்திற்கு பின் கமல்ஹாசன் தயாரிப்பிலும் பிசியாகிவிட்டார். சிம்பு, சிவகார்த்திகேயன் படங்களை தவிர்த்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ள படத்தையும் கமல் தயாரிக்க உள்ளார். இந்த வரிசையில் தற்போது புதுவரவாக நெல்சன் - தனுஷ் படமும் இணைந்துள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... விஷ்ணுகாந்த் இதுக்கு மேல உனக்கு மரியாதையே இல்ல.. உறவினரை மிரட்டியதால் போலீஸ் வரை சென்ற சம்யுக்தா!

Latest Videos

click me!