Published : Mar 29, 2022, 03:30 PM ISTUpdated : Mar 29, 2022, 04:26 PM IST
Beast : விஜய் நெல்சன் கூட்டணியில் உருவாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதன் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
அப்பப்பா...வலிமை ரிலீஸ் ஆவதற்குள் ஒரு போர்களத்தையே நடத்தி முடித்து விட்டனர். அஜித்தை ரசிகர்கள். கடந்த 2019-ம் ஆண்டு படப்பிடிப்பிற்கு வந்த வலிமை கொரோனா காரணமாக மீண்டும் மீண்டும் தள்ளிப்போனது.
28
valimai
இரண்டரை வருட காலமாக தயாரிப்பில் இருந்த வலிமை குறித்த அப்டேட்டை வெளியிட கூறி ரசிகர்கள் போனி கபூருடன் போராடி விட்டனர். பிரதமர் முதல் எம்.ஏ வரை அனைத்து பிரமுகர்களிடமும் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர். கிரிக்கெட் அரங்கு, திருச்செந்தூர் கோவில் முருகன் என பாரபட்சம் பார்க்காமல் கோரிக்கை வைத்தனர்.
38
VALIMAI
ஒருவழியாக அப்டேட் அடுத்தப்படுத்து வந்தது ஆனால் பட ரிலீஸூம் தள்ளிப்போனது. பொங்கல் விருந்தாக வெளிவரும் என எதிரிபார்க்கப்ட்ட இந்த படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது. கொரோனா பரவலால் தள்ளிப்போனா வலிமை பின்னர் பிப்ரவரி 24-ம் தேதி திரைக்கு வந்தது.
அஜித் ரசிகர்களை தொடர்ந்து விஜய் ரசிகர்களுக்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. டாக்டர் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் தற்போது விஜயின் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார். இதில் பூஜா ஹெக்டே நாயகியாவும், இயக்குனர் செல்வராகவன் வில்லனாகவும் நடித்து வருகின்றனர்.
58
BEAST
கடந்தாண்டு மார்ச்சில் படப்பிடிப்பை துவங்கிய பீஸ்ட் படத்திலிருந்து 100 வது நாள் புகைப்படம் வெளியானதை அடுத்து முதல் சிங்குளுக்கான ப்ரோமோ வெளியானது. இதில் இசையமைப்பாளர் அனிரூத், இயக்குனர் நெல்சன், நடிகர் சிவகார்த்திகேயன் கமெண்ட்ஸால் தெறிக்க விட்டனர்.
68
BEAST
டெல்லி, ஜார்ஜியா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை முடித்துள்ள இந்த படத்திலிருந்து அரபிக் குத்து பாடலை அடுத்து இரண்டாவது சிங்கிளாக 'ஜாலியா ஜிம்கானா'பாடல் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. இந்த பாடலை விஜய் தன சொந்த குரலில் பாடியுள்ளார்.
78
BEAST
பட ரிலீஸுக்கு இன்னும் கொஞ்ச நாட்கள் தான் இருக்கும் நிலையில் படத்திலிருந்து டீசர் அல்லது ட்ரைலர் வெளியாகும் என ரசிகர்கள் எதிரிபார்த்து காத்திருக்கின்றனர். இதற்கிடையே புதிய அப்டேட் வருவதாக இயக்குனர் அறிவித்திருந்தார்.
இந்த அப்டேட் அறிவிப்பு டீசர் என கொண்டாட்டத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரும் வகையில் ஒரே ஒரு போட்டோ மட்டுமே வெளியானது. இதையடுத்து 'WeWantBeastTeaser' என்னும் ஹேஷ் டேக்கை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.