வாரிசு டிரைலர் பார்த்து அப்செட் ஆன விஜய் ரசிகர்கள்... ஏன் தெரியுமா?

First Published | Jan 4, 2023, 5:40 PM IST

விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ள நிலையில், அந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள் கடும் அப்செட் ஆகி உள்ளார்களாம்.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. பேமிலி செண்டிமெண்ட் படமான இதற்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படம் 2 மணிநேரம் 50 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டிருப்பதாகவும் நேற்று அப்டேட் வெளியான நிலையில், இன்று அப்படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி நடிகர் விஜய்யின் வாரிசு பட டிரைலர் வெளியாகி உள்ளது. காமெடி, செண்டிமெண்ட், ஆக்‌ஷன் என பக்கா கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த டிரைலராக இது இருந்தாலும், இந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள் கடும் அப்செட் ஆகி உள்ளனர். ஏனெனில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ள போதும், இந்த டிரைலரிலும் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கவில்லை.

இதையும் படியுங்கள்... துணிவுக்கு போட்டியாக செம்ம மாஸா... கெத்தா ரிலீசானது தளபதி விஜய்யின் வாரிசு பட டிரைலர்

Tap to resize

இன்னுமா ரிலீஸ் தேதி முடிவு செய்யாமல் இருக்கிறீர்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். துணிவு படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆவதால் தேதியை இரு படங்களும் அறிவிக்காமல் இழுத்தடித்து வருகின்றனர். ஆனால் படத்தை வாங்கியுள்ள விநியோகஸ்தர்களிடம் துணிவு படம் 11-ந் தேதியும், வாரிசு படம் 12-ந் தேதியும் ரிலீசாகும் என சொல்லி வைத்துள்ளனர்.

ரிலீஸ் தேதி முடிவு செய்துவிட்டாலும் அதனை அறிவிக்காமல் இருப்பது தான் விஜய் ரசிகர்களை அப்செட் ஆக்கி உள்ளது. கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்திற்கு 10 நாட்களுக்கு முன்னதாகவே முன்பதிவு தொடங்கப்பட்டது. ஆனால் இம்முறை வாரிசு படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இதுவரை முன்பதிவு தமிழ்நாட்டில் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... TTF டாஸ்க்கில் டம்மி பீஸ் ஆன அசீம்... ‘என்ன பாஸ் வாய் மட்டும் தானா’ என வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Latest Videos

click me!