விஜய் அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதால் தற்போது கோலிவுட்டே பரபரப்பாக இயங்கி வருகிறது. அஜித் நடித்துள்ள துணிவு படம் வருகிற ஜனவரி 11-ந் தேதியும், விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் ஜனவரி 12-ந் தேதியும் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் இப்படங்களின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.
விஜய்யின் பீஸ்ட் பட டிரைலர் ரிலீசான ஒரே நாளில் 30 மில்லியன் பார்வைகளைப் பெற்றதே தற்போது வரை சாதனையாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி யூடியூப்பில் இதுவரை மொத்தமாக 60 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ள அந்த டிரைலர் தான் அதிக பார்வைகளைப் பெற்ற தமிழ் பட டிரைலர் என்கிற சாதனையையும் படைத்துள்ளது.
துணிவு படத்தால் பீஸ்ட் பட சாதனையை முறியடிக்க முடியாமல் போனதால், தற்போது சினிமா ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனமும் விஜய்யின் வாரிசு பட டிரைலர் பக்கம் திரும்பி உள்ளது. இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ள வாரிசு டிரைலர், பீஸ்ட் பட சாதனையை முறியடிக்க அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனக்கு போட்டி நான் தான் என ஆடியோ லாஞ்சில் விஜய் பேசியிருந்தார். அதன்படியே பீஸ்ட் பட சாதனையை அவரின் வாரிசு படம் முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்...
LCU-வில் இணைகிறாரா பொன்னியின் செல்வன்?... லோகேஷ் கனகராஜ் சொன்ன கதையை கேட்டு மெர்சலான ஜெயம் ரவி