பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கஜோல். இவர் தமிழிலும் பிரபுதேவாவுக்கு ஜோடியாக மின்சார கனவு படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த காஜல், அடுத்தடுத்து பாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்ததால் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
கஜோல், அஜய் தேவ்கன் இருவருமே தற்போது சினிமாவில் படு பிசியாக நடித்து வருகின்றனர். கஜோல் நடிப்பில் அண்மையில் சலாம் வெங்கி என்கிற திரைப்படம் வெளியானது. இப்படத்தை நடிகை ரேவதி இயக்கி இருந்தார். அதேபோல் அஜய் தேவ்கனும் தற்போது போலா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இது தமிழில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன கைதி படத்தின் இந்தி ரீமேக் ஆகும். இப்படத்தை அவரே இயக்கியும் வருகிறார்.
இப்படி கஜோலும், அஜய் தேவ்கனும் பாலிவுட்டை கலக்கி வரும் நிலையில், விரைவில் அவரது மகளும் பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வருவார் என்கிற பேச்சு அடிபட தொடங்கி உள்ளது. இதற்கு காரணம் அவரின் சமீபத்திய புகைப்படங்கள் தான்.