ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான பேச்சிலர் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தவர் திவ்ய பாரதி. முதல் படத்திலேயே சவாலான வேடத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்ற இவருக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.
இதுதவிர ஆசை என்கிற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார் திவ்ய பாரதி. இது மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற இஷ்க் என்கிற காதல் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். பரியேறும் பெருமாள் படத்தின் நாயகன் கதிர் தான் இப்படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.