முதல் படத்துக்கே ‘ஏ’ சான்றிதழ்... இதென்னடா எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு இப்படி ஒரு ஒற்றுமையா..!

Published : Jan 04, 2023, 03:20 PM IST

தமிழ் திரையுலகில் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கும் இடையே உள்ள ஒரு ஆச்சர்யமான ஒற்றுமை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

PREV
14
முதல் படத்துக்கே ‘ஏ’ சான்றிதழ்... இதென்னடா எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு இப்படி ஒரு ஒற்றுமையா..!

தமிழ் திரையுலகின் மூலம் பிரபலமாகி பின்னர் தமிழக அரசியலில் தடம் பதித்து மிகப்பெரிய ஆளுமையாக திகழ்ந்து வந்தவர்கள் என்றால் அது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தான். இன்று அதிமுக என்கிற கட்சி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறது என்றால் அதற்கு முக்கியமான காரணம் அவர்கள் இருவரும் தான். சினிமாவிலும் இவர்கள் இருவரது படங்களுக்கும் எப்போதுமே தனி மவுசு உண்டு.

24

எம்.ஜி.ஆர். உடன் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்த பெருமை ஜெயலலிதாவுக்கு உண்டு. இவ்வாறு தமிழ் திரையுலகில் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ள இவர்கள் இருவருக்கும் ஒரு ஆச்சர்யமான ஒற்றுமை உள்ளது. அது என்னவென்றால் இவர்கள் இருவரின் அறிமுக படங்களுக்கு ஏ சான்றிதழ் கிடைத்தது. ஜெயலலிதா தெலுங்கில் அறிமுகமான படத்துக்கும், எம்.ஜி.ஆர். தமிழில் அறிமுகமான படத்துக்கும் தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.

இதையும் படியுங்கள்... துணிவு படத்தால் முறியடிக்க முடியாத... பீஸ்ட் டிரைலர் சாதனையை தட்டித்தூக்கி முதலிடம் பிடிக்குமா வாரிசு டிரைலர்?

34

ஜெயலலிதா கடந்த 1965-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான வெண்ணிற ஆடை படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இப்படம் வெளிவந்த நான்கே மாதத்தில் ஜெயலலிதா தெலுங்கில் அறிமுகமான மனசுலு மமதலு என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படம் தான் தெலுங்கு சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஏ சான்றிதழ் பெற்ற படமாகும். இப்படத்தில் ராஜஸ்ரீ என்பவர் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்ததன் காரணமாக இதற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

44

ஜெயலலிதா தெலுங்கில் அறிமுகமான படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்ததைப் போல் தமிழில் எம்.ஜி.ஆர் ஹீரோவாக அறிமுகமான மர்மயோகி என்கிற படத்துக்கும் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலக வரலாற்றில் முதன்முறையாக ஏ சான்றிதழ் பெற்ற படம் இதுவாகும். ஏ சான்றிதழ் கொடுக்கும் அளவுக்கு இதில் ஆபாச காட்சிகளெல்லாம் எதுவும் இடம்பெறவில்லை. இதில் ஒருவர் பேயாக தோன்றுவதை காரணம் காட்டி சென்சாரில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது. 

இதையும் படியுங்கள்... சன்னி லியோனுக்கே டஃப் கொடுப்பாங்க போல... காட்டுத் தீ போல் பரவும் கஜோல் மகளின் டூமச் கிளாமர் போட்டோஸ்

Read more Photos on
click me!

Recommended Stories