சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட விஜய் தேவரகொண்டா! லைகர் படத்துக்கு கிளம்பிய திடீர் எதிர்ப்பு- ஏன் தெரியுமா

Published : Aug 20, 2022, 02:54 PM IST

Liger : விஜய் தேவரகொண்டா நடித்துள்ள லைகர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 25-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. 

PREV
15
சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட விஜய் தேவரகொண்டா! லைகர் படத்துக்கு கிளம்பிய திடீர் எதிர்ப்பு- ஏன் தெரியுமா

தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்ட கடந்த 2018-ம் ஆண்டு ரிலீசான கீதா கோவிந்தம் படம் மூலம் மிகவும் பாப்புலர் ஆனார். அப்படத்தை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான டியர் காம்ரேட் படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததால், அவருக்கான ரசிகர் கூட்டமும் பெரிதானது. குறிப்பாக அவருக்கு பெண் ரசிகைகள் அதிகம்.

25

தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் லைகர் திரைப்படம் உருவாகி உள்ளது. பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கியுள்ள இப்படத்தை நடிகை சார்மி தயாரித்துள்ளார். இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடித்துள்ளார். இதுதவிர வில்லனாக பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் நடித்திருக்கிறார்.

35

லைகர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 25-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன்படி சமீபத்தில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜய் தேவரகொண்டா, அமீர்கானின் லால் சிங் சத்த திரைப்படம் தோல்வி அடைந்ததற்கு மக்கள் டுவிட்டரில் எதிர்ப்பு தெரிவித்ததும் ஒரு காரணம் என பேசினார்.

இதையும் படியுங்கள்... முதல் நாளை விட இரண்டாம் நாளில் அதிக வசூல்... பாக்ஸ் ஆபிஸில் அதகளம் செய்யும் திருச்சிற்றம்பலம்

45

இவ்வாறு எதிர்ப்பதால் அமீர்கான் மட்டும் பாதிக்கப்படவில்லை. அப்படத்தில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி இருக்கிறார்கள் அவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்படுவார்கள் என பேசி இருந்தார். தவறான புரிதலால் இவ்வாறு நடப்பதாக விஜய் தேவரகொண்டா பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு பின்னர் தற்போது #BoycottLigermove மற்றும் #BoycottVijayDevarakonda ஆகிய ஹேஷ்டேக்குகள் தற்போது டுவிட்டரில் டிரெண்டாகி வருகின்றன.

55

அமீர்கானுக்கு ஆதரவாக பேசியதால் தற்போது அவரது படத்திற்கே எதிர்ப்பு குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன. இதன்மூலம் நடிகர் விஜய் தேவரகொண்டா சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டதாக விமர்சித்து வருகின்றனர். இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்து வருவதாக கூறியதால் நடிகர் அமீர்கான் தேசபற்று அற்றவர் எனக்கூறி அவருக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... அட... இவர்தான் எஸ்பிபி - யின் மகளா? வைரலாகும் புகைப்படம் இதோ...

Read more Photos on
click me!

Recommended Stories