SP Balasubrahmanyam
பிரபல பின்னணி பாடகராக இருந்தவர் தான் மறைந்த எஸ்பிபி. இவரின் குரலுக்கு பல கோடி ரசிகர்கள் அடிமை. கன்னடம், இந்தி, மலையாளம் என பன்மொழிகளிலும் எதிரொலித்தது இவரது குரல்,.பின்னணி பாடகர் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகர், இசையமைப்பாளர், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி வந்தார்.
SP Balasubrahmanyam
எஸ்பி பாலசுப்ரமணியம் இவர் முதன் முதலில் தெலுங்கு திரைப்படத்தில் தான் பின்னணி பாடகராக அறிமுகமானார். 5 சதாப்தங்களுக்கு மேலான இவரது இசைப் பயணத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் உருவாகியுள்ளது. 16க்கும் மேற்பட்ட மொழிகளில் இவரது குரலில் வெளியான பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்துள்ளன.
மேலும் செய்திகளுக்கு...தனக்கு பிடிக்காத நடிகர்கள்... விஜயின் அதிரடி பேட்டி...
இவர் கின்னஸ் உலக சாதனையும் படைத்துள்ளார் பாலசுப்பிரமணியம். கடந்த 1981 ஆம் ஆண்டு காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கன்னடத்தில் 21 பாடல்களை பதிவு செய்து சாதனை படைத்தார். அவர் தமிழில் 19 பாடல்களையும், இந்தியில் 16 பாடல்களையும் ஒரே நாளில் பதிவு செய்திருந்தார் என்பது மற்றொரு சாதனை தான்.
SP Balasubrahmanyam
2012 ஆம் ஆண்டு என் டி ஆர் தேசிய விருதை பெற்றிருந்தார் எஸ்பிபி. அதேபோல கேரள அரசின் ஹரிவராசனம் விருதையும் வென்றிருந்தார் பாலசுப்ரமணியம். பின்னர் 47வது சர்வதேச திரைப்பட விழாவில் ஆண்டின் சிறந்த இந்திய திரைப்பட ஆளுமை விருதை வென்ற இவர், இந்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய மூன்று உயரிய விருதுகளையும் பெற்றிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...காதுகளை பாதுகாப்பாக வைத்துகொள்ளுகள்.. நிபந்தனையற்ற அன்புடன் அஜித் கூறிய தகவல்! வைரலாகும் சுரேஷ் சந்திரா ட்விட்
இன்று வரை எஸ்பிபியின் குரல் தனி வரவேற்பு உள்ளது. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கோவிட்-19 பாதிப்பால் ஒரு மாதத்திற்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் உடல் நலம் தேறிவர இளையராஜா முதல் ரசிகர்கள் வரை பல்லாயிரக்கணக்கானவர்கள் பிரார்த்தனை செய்தனர். இருந்தும் சிகிச்சை பலனின்றி பூவுலகை விட்டு விலகினார் எஸ்பிபி.