மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் திருச்சிற்றம்பலம். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் நித்யா மேனன், பாரதிராஜா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், ராஷி கண்ணா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருந்தது. அனிருத் இசையமைத்திருந்த இப்படத்திற்கு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.