இந்த ஆண்டு நடிகை காஜல் அகர்வால் கிருஷ்ண ஜெயந்தியை தன்னுடைய செல்ல மகனுடன் கொண்டாடியுள்ளார். கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளோடு இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் காஜல் அவ்வப்போது தன்னுடைய கணவர், குழந்தை, மற்றும் குடும்பத்தினருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், நேற்று உலகம் முழுவதும் இந்து மக்களால் கொண்டாடப்பட்ட கிருஷ்ண ஜெயந்தியை இந்த வருடம் தன்னுடைய மகனுடன் கொண்டாடியுள்ளார் காஜல்.
சமீபத்தில் கூட காஜல் அகர்வால் கடப்பாவாக மாறி, அவரது மகன் பாகுபலி போல் காஜல் தலையில் கால் வைத்தபடி புகைப்படம் ஒன்றை வெளியிட அது வேறு லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.