தனக்கு பிடிக்காத நடிகர்கள்... விஜயின் அதிரடி பேட்டி...

First Published | Aug 20, 2022, 1:13 PM IST

பிரபல பத்திரிகை சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த தளபதி விஜய் இடம் உங்களுக்கு பிடிக்காத நடிகர்கள் யார் என கேட்கப்பட்டுள்ளது.

varisu

தளபதி என ரசிகர்களால் போற்றப்படும் நடிகர் விஜய். தற்போது வாரிசு படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அந்த படத்தை டோலிவுட் பிரபல இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி தயாரித்து வருகிறார்.  இந்த படத்தில் புஷ்பா நாயகி ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, குஷ்பூ, ஷாம் என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்று உள்ளனர். குடும்ப செண்டிமெண்ட் சார்ந்த கதைக்களமாக இந்த படம் உருவாவதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும்.

varisu

வாரிசு படத்தின் மூன்று போஸ்டர்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வெளியாகி சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. ஹைதராபாத், சென்னையை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த இடத்திற்கான படப்பிடிப்பு காட்சிகளும் வெளியாகியிருந்தது.

மேலும் செய்திகளுக்கு...காதுகளை பாதுகாப்பாக வைத்துகொள்ளுகள்.. நிபந்தனையற்ற அன்புடன் அஜித் கூறிய தகவல்! வைரலாகும் சுரேஷ் சந்திரா ட்விட்

Tap to resize

varisu

விஜய் முன்னதாக சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாகவும்,  யோகி பாபு உள்ளிட்டோர் துணை நடிகர்களாகவும் வந்திருந்தனர்.

மேலும் செய்திகள்: ரோட்டில் நின்று கொண்டே... குட்டை டவுசரில் விக்கியூடன் கண்டமேனிக்கு ரொமான்ஸ் பண்ணும் நயன்தாரா! ஹாட் போட்டோஸ்!

varisu

கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படம் நல்ல கல்லாகட்டி இருந்தது. சமீபகாலமாக ஆக்ஷன் படங்களில் தோன்றி வரும் விஜய் வாரிசு படத்தில் செண்டிமெண்ட் கலந்த கமர்சியலாக படமான வாரிசு படத்தில் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்: பெத்த மகனை விட்டு விட்டு.. திரையரங்கில் நடிகையின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு ஓடும் தனுஷ்! வீடியோ

varisu

இந்நிலையில் விஜய் தனக்கு பிடிக்காத நடிகர்கள் குறித்து முன்னதாக அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. பிரபல பத்திரிகை சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த தளபதி விஜய் இடம் உங்களுக்கு பிடிக்காத நடிகர்கள் யார் என கேட்கப்பட்டுள்ளது.

Varisu

அதற்கு பதில் அளித்த விஜய் அனைத்து நடிகர்களையும் தனக்கு பிடிப்பதாகவும் ஒவ்வொரு நடிகருக்கும் தனித்துவம் உள்ளது என்றும் அழகாக பதில் அளித்துள்ளார்.  இந்த பேட்டி தான் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

Latest Videos

click me!