இதென்னப்பா புது டிரெண்டா இருக்கு... தன்னைத் தானே திருமணம் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகை

First Published | Aug 20, 2022, 12:24 PM IST

kanishka soni : தமிழில் ஒளிபரப்பான என் கணவன் என் தோழன் என்கிற சீரியலில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வது என்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் குஜராத் மாநிலம் பரோடா பகுதியைச் சேர்ந்த ஷாமா பிந்து என்கிற 24 வயது பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டது மட்டுமின்றி சிங்கிளாக ஹனிமூன் சென்றும் அதிர்ச்சி கொடுத்தார்.

இந்நிலையில், தற்போது அதேபோல் மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் கனிஷ்கா சோனி. குறிப்பாக இவர் நடித்த தியா அவுர் பாத்தி ஹம் என்கிற சீரியலில் தமிழில் என் கணவன் என் தோழன் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இதையும் படியுங்கள்...  ஆண்கள் பணம் கொடுத்தால் பெண்களும் என்ஜாய் பண்றாங்க... என்னை அர்ஜஸ்மென்ட்க்கு கூப்பிடல: ரேகா நாயர்


இவ்வாறு பாப்புலரான நடிகையாக வலம் வரும் கனிஷ்கா தற்போது தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் கழுத்தில் தாலி மற்றும் நெற்றியில் குங்குமத்துடன் வீடியோ வெளியிட்ட அவர் தான் சுயநினைவோடு தான் இந்த முடிவை எடுத்ததாக கூறி உள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது : “தனிமை தான் தனக்கு மகிழ்ச்சியை தருகிறது. நான் நினைத்தபடி எந்த ஒரு ஆணையும் இதுவரை என் வாழ்நாளில் சந்திக்கவில்லை. அதனால் தனியாகவே இருக்க முடிவு செய்துவிட்டேன். திருமணம் என்பது உடல் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல அதில் காதல், நேர்மை ஆகியவையும் இருக்க வேண்டும். நான் குடித்துவிட்டு இவ்வாறு சொல்லவில்லை. எனக்கு குடிப்பழக்கமும் கிடையாது.” என கூறி உள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகிப் போய் உள்ளனர்.

இதையும் படியுங்கள்...  சூர்யாவின் ஜெய் பீம் படம் பார்த்து கதறி அழுத சீன மக்கள் - வைரலாகும் வீடியோ

Latest Videos

click me!