குபேரா படத்தில் முதன்முதலில் நடிக்க இருந்தது தனுஷ் இல்லையாம், பிரபல ஹீரோ அந்த கதையை கேட்டு ரிஜெக்ட் பண்ணியதை அடுத்து தான் தனுஷுக்கு அந்த வாய்ப்பு சென்றதாம்.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் குபேரா. இப்படம் கடந்த ஜூன் 20ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, சுனைனா, பாக்கியராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை சுமார் 120 கோடி பட்ஜெட்டில் தயாரித்து இருந்தது. இப்படத்தில் நடிகர் தனுஷ் பிச்சைக்காரனாக நடித்திருந்தார். இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்தது.
25
தமிழில் பிளாப் ஆன குபேரா
குபேரா திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜூன் 20ந் தேதி ரிலீஸ் ஆனது. ஆனால் படத்திற்கு தமிழ்நாட்டில் கலவையான விமர்சனங்களே கிடைத்தது. அதுமட்டுமின்றி படத்தின் நீளம் 3 மணிநேரத்திற்கும் மேல் இருந்ததால், அது மிகப்பெரிய மைனஸாக அமைந்தது. இதனால் குபேரா திரைப்படம் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. இப்படம் ரிலீஸ் ஆகி இரண்டு வாரங்களை கடந்தும் தமிழ்நாட்டில் வெறும் 20 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இப்படத்திற்கு தமிழ்நாட்டில் மட்டும் ரூ.15 கோடி வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
35
தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த குபேரா
ஆனால் அதேவேளையில் குபேரா திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இதன் காரணமாக இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.125 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. இது நடிகர் தனுஷின் ஐந்தாவது 100 கோடி வசூல் படமாகும். இப்படத்தின் வெற்றி நடிகர் தனுஷுக்கு முழு திருப்தியை கொடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது. ஏனெனில் தமிழ்நாட்டில் இப்படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் படக்குழுவும் அப்செட்டில் உள்ளதாம். இயக்குனர் சேகர் கம்முலா சமீபத்திய பேட்டியில் தமிழ் ஆடியன்ஸின் ரெஸ்பான்ஸால் ஏமாற்றம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
குபேரா படத்தில் தனுஷின் நடிப்பை விமர்சகர்கள் வியந்து பாராட்டி உள்ளனர். இப்படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்றும் கூறி வருகிறார்கள். முன்னணி ஹீரோக்கள் செய்யத் தயங்கும் விஷயத்தை நடிகர் தனுஷ் அசால்டாக செய்துள்ளதாக ஏராளமானோர் கூறினர். இந்த நிலையில், குபேரா படம் பற்றிய ஒரு ஆச்சர்ய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் நடிக்க இயக்குனர் சேகர் கம்முலாவின் முதல் சாய்ஸாக இருந்தது தனுஷ் இல்லையாம்.
55
குபேரா படத்தின் பர்ஸ்ட் சாய்ஸ்
அதன்படி குபேரா படத்தின் கதையை இயக்குனர் சேகர் கம்முலா முதன்முதலில் விஜய் தேவரகொண்டாவிடம் தான் சொன்னாராம். ஆனால் கதை கேட்டுவிட்டு, அவர் தான் பிச்சைக்காரனாக நடித்தால் தன்னுடைய ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அந்த ரோல் தனக்கு செட் ஆகாது என கூறி நடிக்க மறுத்துவிட்டாராம். இதையடுத்து தான் இந்த கதை தனுஷுக்கு சென்றிருக்கிறது. இதை அறிந்த ரசிகர்கள் நல்ல சான்ஸை விஜய் தேவரகொண்டா மிஸ் பண்ணிவிட்டதாக கூறி வருகின்றனர்.