அதனைத் தொடர்ந்து அவர் நடித்த டியர் காம்ரேட் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விஜய் தேவரகொண்டாவுடன் லிப் லாக் காட்சிகளில் எல்லாம் நடித்து, இளசுகளின் கனவு கன்னியாக மாறிவிட்டார். இவர்கள் இருவருக்குள்ளும் காதல் துளிர் விட்டு பொங்கி வழிந்து கொண்டிருப்பதாக சில கிசுகிசுக்கள் எழுந்து வந்தாலும், இருவருமே தொடர்ந்து மௌனம் காத்து வந்தார்கள்.