Vikram next :ஹீரோவுக்கு ரெஸ்ட் விட்டு.. முதன்முறையாக வில்லனாக களமிறங்கும் விக்ரம்- முதல் அடி யாருக்கு தெரியுமா

Ganesh A   | Asianet News
Published : Feb 23, 2022, 08:32 AM IST

கோப்ரா, பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள விக்ரம் அடுத்ததாக புதிய படமொன்றில் வில்லனாக நடிக்க கமிட் ஆகி உள்ளாராம்.

PREV
15
Vikram next :ஹீரோவுக்கு ரெஸ்ட் விட்டு.. முதன்முறையாக வில்லனாக களமிறங்கும் விக்ரம்- முதல் அடி யாருக்கு தெரியுமா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம் (vikram). தற்போது இவர் கைவசம் கோப்ரா, துருவ நட்சத்திரம், மகான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் உள்ளன. இதில் கோப்ரா (Cobra) படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

25

அதேபோல் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் (dhruva natchathiram) படத்தை கவுதம் மேனன் (Gautham menon) இயக்கி உள்ளார். நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

35

அடுத்ததாக விக்ரம் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன் (Ponniyin selvan). இப்படத்தை மணிரத்னம் இயக்கி உள்ளார். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் (AR Rahman) இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் இப்படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

45

இதுதவிர அவர் பா.இரஞ்சித் (Pa Ranjith) இயக்கும் புதிய படத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார். விக்ரமின் 61-வது படமான இதனை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் விக்ரம் (Vikram) அடுத்ததாக மேலும் ஒரு படத்தில் கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

55

அதன்படி பிரபல தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ள புதிய படத்தில் நடிகர் விக்ரம் (Vikram) நடிக்க உள்ளாராம். இப்படத்தில் அவர் மகேஷ் பாபுவுக்கு (Mahesh babu) வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் நடிகர் விக்ரம் டோலிவுட்டில் வில்லனாக அறிமுகமாக உள்ளார்.

இதையும் படியுங்கள்... Arabic Kuthu Song : பீஸ்ட் படத்தில் ‘அரபிக் குத்து’க்கு ஆப்பு வச்ச நெல்சன்! லீக்கான தகவலால் ஷாக்கான ரசிகர்கள்

Read more Photos on
click me!

Recommended Stories