இந்தோ-கனடிய பாடகியான ஜோனிடா காந்தி (Jonita Gandhi), இதுவரை ஆங்கிலம், இந்தி, தமிழ், பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
டெல்லியில் பிறந்த ஜோனிடா தன் ஏழு வயதிலேயே கனடா செல்ல நேர்ந்தது, அங்கு டொராண்டோ மற்றும் பிராம்ப்டனில் வாழ்ந்து வந்தாலும், இவர் ஒரு பொழுதுபோக்கு இசைக்கலைஞராக விளங்கியதால், சிறுவயதிலேயே ஜோனிடாவின் பாடல் திறமையை கண்டறிந்து அவரது குடும்பத்தினர் ஊக்கப்படுத்தியதால் இன்று ஒரு பாடகியாக வலம் வருகிறார்.
ஜோனிடா காந்தி (Jonita Gandhi) தன்னுடைய 17 வயதில் இணையத்தில் பதிவேற்றிய காணொளிகள் அவருக்குப் பெரும்புகழை ஈட்டிக்கொடுத்தது. சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் பாடும் வாய்ப்பையும் பெற்றார். இதுவே அவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
தொடர்ச்சியாகப் பல திரைப்படங்களில் பாடிய ஜோனிடா, ஏ.ஆர்.ரகுமானுடன் ஓர் இந்தித் திரைப்படத்தில் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பை அடுத்து, தமிழ்த் திரையுலகிலும் காலடி எடுத்து வைத்தார். மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி அவரது முதலாவது தமிழ்ப்பாடல் இடம்பெற்றது.
பின்னர் அனிரூத்தின் ஃபேவரைட் பாடகிகளில் ஒருவராக மாறிய ஜோனிடா, அவர் இசையில் பாடிய இறைவா, செல்லம்மா, அரபிக் குத்து (Arabic Kuthu) ஆகிய பாடல்கள் வைரல் ஹிட் ஆகின.
இவ்வாறு பிசியான பாடகியாக வலம் வரும் ஜோனிடா காந்தி (Jonita Gandhi), தற்போது தமிழில் உருவாகும் வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் என்கிற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தை நடிகை நயன்தாரா தயாரிக்கிறார்.